எம்எல்ஏவின் மகன் வீட்டில் ரூ.6 கோடி மீட்பு: லோக் ஆயுக்தா அதிகாரிகள் அதிரடி

எம்எல்ஏவின் மகன் வீட்டில் ரூ.6 கோடி மீட்பு: லோக் ஆயுக்தா அதிகாரிகள் அதிரடி
X

மீட்கப்பட்ட ரூ.6 கோடி பணத்துடன் லோக் ஆயுக்தா அதிகாரிகள்.

கர்நாடக பாஜக எம்எல்ஏவின் மகன் வீட்டில் இருந்து 6 கோடி ரூபாய் ரொக்கம் மீட்கப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக பாஜக எம்எல்ஏவின் மகன் வீட்டில் இருந்து 6 கோடி ரூபாய் ரொக்கம் மீட்கப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜக எம்எல்ஏ மடல் விருபக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் மடல் வீட்டில் இருந்து ரூ.6 கோடி பணத்தை மீட்டு லோக் ஆயுக்தா அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.

கர்நாடக பாஜக எம்எல்ஏ மடல் விருபக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் மடல் இன்று காலை கைது செய்யப்பட்டார். கர்நாடக அரசின் ஊழல் தடுப்பு கண்காணிப்பு அமைப்பான லோக் ஆயுக்தா, அவரது வீட்டில் இருந்து ரூ.6 கோடி பணத்தை மீட்டுள்ளது.

ரூ.40 லட்சம் பெற்ற பாஜக எம்எல்ஏ மடல் விருபாக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் மடல் நேற்று வியாழக்கிழமை கையும் களவுமாக பிடிபட்டார். இதையடுத்து அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் கர்நாடக அரசின் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பாஜக எம்எல்ஏ வீட்டில் ரூ.6 கோடியை லோக் ஆயுக்தா அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதால் எம்எல்ஏவையும் விசாரணைக்கு அழைக்கும் என ஊழல் தடுப்புப் பிரிவு வட்டாரத்தில் கூறப்படுகிறது. ரூ.40 லட்சம் லஞ்சம் தவிர, பிரசாந்த் மடலின் அலுவலகத்தில் 1.7 கோடி ரூபாயை லோக் ஆயுக்தா கண்டுபிடித்து மீட்டுள்ளது.

பாஜக எம்எல்ஏ மடல் விருபக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் மடல் தனது அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும்போது லோக் ஆயுக்தா அதிகாரிகளிடம் சிக்கினார். கர்நாடகா சோப்ஸ் & டிடர்ஜெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக இருந்து வருபவர் மடல் விருபக்ஷப்பா.

லோக் ஆயுக்தா அதிகாரிகளின் அறிக்கையின்படி, லஞ்சம் வாங்கியதாக பிரசாந்த் மீது ஒருவர் நேற்று (வியாழக்கிழமை) காலை புகாரளித்தார். அதன்படி, 40 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பிரசாந்தை லோக் ஆயுக்தா அதிகாரிகள் வலைவீசி கையும் களவுமாக பிடித்தனர்.

லோக் ஆயுக்தாவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தியதில் ரூ. 1.7 கோடி சிக்கியது. பிரசாந்த் அவரது தந்தையின் சார்பில் லஞ்சம் பெற்றதாக சந்தேகிக்கிறோம். அவரது அலுவலகத்தில் கிடைத்த பணத்தின் மூலத்தை விசாரித்து வருகிறோம்" என்றார்.

Tags

Next Story