காங்கிரஸ் கட்சிக்கு அடிமேல் அடி! மூத்த தலைவர் திடீரென விலகல்
சமாஜ்வாதி கட்சியில் இணைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
சரியான தலைமை இல்லாமல், தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து வருகிறது. இதுதவிர, கட்சித் தலைமையின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்து, மூத்த தலைவர்கள் சிலர் விலகி வருகின்றனர்.
அண்மையில் குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர் பதவியை ஹர்திக் படேல் ராஜினாமா செய்தார். அவர் பாஜகவில் இணையலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக கடந்த 2017 முதல் 2021 வரை பதவி வகித்த சுனில் ஜாக்கர், கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.
தற்போது காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த பேரிடியாக, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல், அக்கட்சியில் இருந்து விலகிவிட்டதாக இன்று அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், மே 16-ஆம் தேதியே காங்கிரஸ் கட்சியில் இருந்து தான் விலகிவிட்டதாகவும், சுதந்திரக் குரலாக இனி ஒலிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய கையோடு, அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியில், கபில் சிபல் இணைந்தார். இதற்கு கைமேல் பலனாக, மாநிலங்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் இருந்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிட வேட்புமனுவை கபில் சிபல் இன்று தாக்கல் செய்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu