உள்நாட்டு விமானக் கட்டணம் உயர்வு-மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல்.

உள்நாட்டு விமானக் கட்டணம் உயர்வு-மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல்.
X

உள்நாட்டு விமானக் கட்டணம் உயர்வு

இன்று (ஜூன் 1) முதல் உள்நாட்டு விமானக் கட்டணம் உயர்கிறது!

இ்ன்று (ஜூன் 1) முதல் உள்நாட்டு விமானக் கட்டணம் உயர்வதாக என மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவியதைத் தொடா்ந்து சா்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை தொடா்ந்து நீட்டிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் உலக அளவில் கொரோனா தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால், பயணிகள் விமான சேவைகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெள்ளிக்கிழமை தெரிவிது இருந்தது.

இதனிடையே கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததை அடுத்து உள்ளூர் விமான சேவைகளும் குறைக்கப்பட்டது. இதனால் பராமரிப்பு செலவுகளை சமாளிக்க முடியாமல் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் திணறி வந்த நிலையில், குறைந்தபட்ச கட்டணத்தில் 15 சதவீதம் உயர்த்த உத்தரவிட்டுள்ள மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் ஏற்பட்ட பராமரிப்பு செலவுகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று(ஜூன் 1) முதல் உள்நாட்டு விமானக் கட்டணத்தில் குறைந்தபட்ச வரையறையை 13% இருந்து 16% மாக உயர்த்தியுள்ளது. அதாவது 40 நிமிடங்கள் செல்லக்கூடிய விமானக் கட்டணம் ரூ.2300 - 2600 -ஆக உயர்த்தப்படுகிறது. 60 நிமிடங்கள் செல்லக்கூடிய விமானக் கட்டணம் ரூ.2,900 - 3,300 ஆக உயர்த்தப்படுகிறது. அதற்கு மேல் அதிக பயணக்கட்டணத்தில் மாற்றம் ஏதுவும் செய்யப்படவில்லை. மேலும் 60-90, 90-120, 120-150, 150-180 மற்றும் 180-210 நிமிடங்களுக்கு இடையேயான விமானக் கட்டணம் ரூ. 4,000 , 4,700, 6,100, 7,400 மற்றும், 8,700 ஆக உயர்த்தப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் விமானக் கட்டண வரம்பு விகிதங்கள் 30 சதவீதம் வரை உயர்த்தப்பட்ட நிலையில், மூன்றே மாதங்களில் தற்போது மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!