ஜேஇஇ முதன்மை தேர்வுகளுக்கான தேதி மாற்றம்

ஜேஇஇ முதன்மை தேர்வுகளுக்கான தேதி மாற்றம்
X
ஜேஇஇ முதன்மை தேர்வுகளுக்கான தேதிகளை மாற்றியமைத்து தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

ஜேஇஇ முதன்மை தேர்வுககள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருந்த நிலையில், தற்போது ஜூன் மற்றும் ஜூலை ஆகிய மாதங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி முதல் கட்ட முதன்மைத் தேர்வுகள் ஜூன் 20-ந்தேதியிலிருந்து 29-ந்தேதி வரை நடைபெறும் என்றும் இரண்டாம் கட்ட முதன்மை தேர்வுகள் ஜூலை 21-ந்தேதியிலிருந்து 30-ந்தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதல் கட்ட முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிக்க விரைவில் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

மேலும் www.nta.ac.in மற்றும் https://jeemain.nta.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வர்கள் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!