ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு வரும் 25-ம் தேதிக்கு மாற்றம்: மத்திய அரசு அறிவிப்பு

ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு வரும் 25-ம் தேதிக்கு மாற்றம்: மத்திய அரசு அறிவிப்பு
X

பைல் படம்.

வெளிநாடுகளில் உள்ள 17 இடங்கள் உள்பட இந்தியா முழுவதும் 500 நகரங்களில் உள்ள பல்வேறு மையங்களில் ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது.

JEE exam, Change of date, Entrance exam, Central Govt

ஐ.ஐ.டி, என்.ஐ.டி, ஐ.ஐ.ஐ.டி, போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பி.இ., பி.டெக், பி.பிளான், பி.ஆர்க். உள்ளிட்ட என்ஜினீயரிங் படிப்பில் தகுதியான மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்காக இந்திய அரசு கல்வி அமைச்சகத்தின் தேசிய தேர்வு முகமை சார்பாக ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு வருடத்திற்கு 2 முறை நடத்தப்படுகிறது.

நடப்பு கல்வி ஆண்டுக்கான பகுதி-1 ஜே.இ.இ. முதன்மை நுழைவுத் தேர்வு -2022 கடந்த ‌ஜூன் மாதம் 24-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் பிளஸ்- 2 தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்று எழுதினர். 2-ம் கட்ட நுழைவுத்தேர்வு வருகிற 21-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த தேர்வு வருகிற 25-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சேலம், நாமக்கல் மாணவ- மாணவிகள் உள்பட 6 லட்சத்து 29 ஆயிரத்து 778 பேர் பங்கேற்க உள்ளனர். வெளிநாடுகளில் உள்ள 17 இடங்கள் உள்பட இந்தியா முழுவதும் 500 நகரங்களில் உள்ள பல்வேறு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இதற்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்பட்டது. மாணவ- மாணவிகள் தங்களுடைய விண்ணப்ப எண், பிறந்த தேதி அல்லது பாஸ்வேர்ட் கொடுத்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யுமாறு என்.டி.ஏ. தெரிவித்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!