ஜம்மு-கஷ்மீர்: பாதுகாப்புப் படையினருடன் மோதிய 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-கஷ்மீர்: பாதுகாப்புப் படையினருடன் மோதிய 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
X
ஜம்மு-கஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-கஷ்மீர் யுனியன் பிரதேசம் புல்வாமா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ராஷ்ட்ரிய ரைபிள்ஸ், மத்திய ரிசர்வ் காவல்படை, ஜம்மு-கஷ்மீர் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைகள் குழு ஆகியவை கூட்டாக நடத்திய தேடுதல் வேட்டையின்போது , இந்த துப்பாக்கி சண்டை நடந்தது. அவர்களிடமிருந்து இரண்டு ஏ கே-47 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி