குடியரசு துணைத்தலைவர் இன்று பதவியேற்பு

குடியரசு துணைத்தலைவர்  இன்று பதவியேற்பு
X

குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் 

நாட்டின் 14வது குடியரசு துணைத்தலைவராக இன்று ஜெகதீப் தன்கர் பதவி ஏற்கிறார். குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

நாட்டின் புதிய குடியரசு துணைத்தலைவராக ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். கடந்த 6-ந் தேதி நடந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக களமிறங்கிய அவர் 528 வாக்குகள் பெற்று, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மார்கரெட் ஆல்வாவை தோற்கடித்தார்.

புதியகுடியரசு துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெகதீப் தன்கருக்கு தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், வெங்கையா நாயுடுவின் துணை ஜனாதிபதி பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் நாட்டின் புதியகுடியரசு துணைத்தலைவராக ஜெகதீப் தன்கர் இன்று (11.08.2022) காலை பதவியேற்கிறார். ஜெகதீப் தன்கருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

அப்போது, குடியரசு துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான வெற்றி சான்றிதழ் நகல் வாசிக்கப்படும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!