சிறு தொழில் வணிகர்களுக்கு விரைவாகவும் சுலபமாகவும் கடன் வழங்க ஐடி அமைச்சர் வலியுறுத்தல்

சிறு தொழில் வணிகர்களுக்கு விரைவாகவும் சுலபமாகவும் கடன் வழங்க ஐடி அமைச்சர் வலியுறுத்தல்
X

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், ரயில்வே மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

அடிமட்ட மக்களுக்கு விரைவாகவும், சுலபமாகவும் கடன் வழங்க தளத்தை உருவாக்குமாறு வங்கியாளர்களுக்கு ஐடி அமைச்சர் வலியுறுத்தினார்.

எம்எஸ்எம்இ-க்கள், சிறு தொழில்கள், சிறு வணிகர்கள், அடிமட்ட மக்களுக்கு விரைவாகவும், சுலபமாகவும் கடன் வழங்க தளத்தை உருவாக்குமாறு வங்கியாளர்களுக்கு ஐடி அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தினார்.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தனது ' விடுதலையின் டிஜிடல் பெருவிழா' வார கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தனித்துவமான டிஜிடல் பேமண்ட் விழாவை இன்று நடத்தியது. வங்கி துறை, நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள், ஸ்டார்ட் அப்களை ஒருங்கிணைத்து, டிஜிடல் பரிவர்த்தனைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்த விழா கொண்டாடப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், ரயில்வே மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், எம்எஸ்எம்இ-க்கள், சிறு தொழில்கள், சிறு வணிகர்கள், அடிமட்ட மக்களுக்கு விரைவாகவும், சுலபமாகவும் கடன் வழங்கும் தளத்தை உருவாக்குமாறு வங்கியாளர்களுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். இந்த சவாலை மேற்கொள்ள வங்கியாளர்களுக்கு இன்று ஆதார், டிஜிலாக்கர், யுபிஐ போன்ற மிகச் சிறந்த சூழல் உள்ளதாக அவர் தெரிவித்தார். அடுத்த மூன்று மாதங்களில் இந்தச் சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப, திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவு துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திர சேகர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் அஜய் சாவ்னி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



Tags

Next Story
சத்தியமங்கலத்தில் விசிக ஆர்ப்பாட்டம்...! அமித்ஷாவுக்கு எதிராக கோஷங்கள்..!