வெற்றிகரமாக செலுத்தப்பட்ட ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம்
ககன்யான் திட்ட மாதிரி விண்கலத்தின் மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் கனவு திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் வரும் 2025 ஆம் ஆண்டு செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக மூன்று கட்ட சோதனைகளை இஸ்ரோ நடத்தவுள்ளது. இதற்கான முதற்கட்ட சோதனையாக முதல் ஆளில்லா டிவி-டி1 ராக்கெட் இன்று காலை 8 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என அறிவித்திருந்தது இஸ்ரோ.
இதற்கான இறுதி கட்ட பணிகள் நிறைவடைந்து கவுன்டவுன் நேற்று தொடங்கியது. தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக ககன்யான் மாதிரி விண்கலம் சோதனையில் தாமதம் ஏற்பட்டது. காலை 8 மணிக்கு ஏவப்பட இருந்த விண்கலம் 8.30 மணிக்கு ஏவப்படும் என அறிவிக்கப்பட்டது.
மோசமான வானிலை காரணமாக இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்ட ககன்யான் சோத திட்டம் பின்னர் நிறுத்தப்பட்டது. இதற்கான கவுன்டவுனும் கடைசி 5 நொடிகளில் நிறுத்தப்பட்டு, ககன்யான் விண்வெளி திட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தொழில் நுட்ப கோளாறு காரணமாக ககன்யான் திட்ட மாதிரி சோதனை தன்னிச்சையாகவே ஹோல்டானது. இதுகுறித்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாகவும் விண்கலம் பாதுகாப்பாக உள்ளது என்றார். அதில் நடந்த கோளாறு என்ன என்பது கண்டறியப்பட்டு அதன்பின்னர் விரைவில் விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என்றார்.
டிவி-டி1 ராக்கெட்டில் எரிபொருள் பற்றுவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும், தற்போது என்ஜின் கோளாறு சரி செய்யப்பட்டு பின்னர் காலை 10 மணிக்கு திட்டமிட்டப்படி விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது. இதனை தொடர்ந்து காலை 10 மணிக்கு ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu