என்னது ஜனாதிபதி விருது பெற்றவர் போலி டாக்டரா? ஆச்சரியம், ஆனால் உண்மை
Fake Doctors Certificate - இந்தியாவில் போலிகளின் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. மருத்துவ துறையில் போலி டாக்டர்கள் என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நேரங்களில் கண்டுபிடிக்கப்படுவது உண்டு. ஆனால் ஒரே நேரத்தில் 560 போலீஸ் டாக்டர்கள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வேறு எந்த வெளிநாட்டிலும் அல்ல நமது பாரத திருநாட்டின் கொல்கத்தா மாநிலத்தில் தான் இந்த அக்கிரமம் நடந்துள்ளது.
அங்கு 560 டாக்டர்கள் போலியாக பட்டம் பெற்றவர்கள் என சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் அவர்களில் சிலர் கொல்கத்தாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைகளில் பணிபுரிவதும் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இதைவிட கொடுமை என்னவென்றால் போலி டாக்டர்களில் ஒருவர் சமீபத்தில் இந்தியாவின் மிக உயரிய விருதான ஜனாதிபதி விருதையும் பெற்றிருக்கிறார் என்பது கூடுதல் தகவலாகும்.
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? இவை அனைத்தும் உண்மை தான்.இதுபோன்ற போலி டாக்டர்களிடம் சிக்கிய நோயாளிகளை கடவுள் தான் காப்பாற்றவேண்டும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu