இந்தியாவில் ரயில்வே அறிமுகமான இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு

இந்தியாவில் ரயில்வே அறிமுகம் நவீன இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.
1853 ஆம் ஆண்டு இதே ஏப்ரல் 16 ஆம் தேதி பொரிபேண்டர் மற்றும் தானே 32 கி.மீ ரயில் பயணத்தை பிரிட்டிஷார் அறிமுகப்படுத்தினர். இந்த ரயில் மூலம், இந்திய பொருளாதாரம் சக்கரங்களும் உருள ஆரம்பித்தன. இதே தினத்தில் பிற்பகல் 3.35 மணிக்கு 34 கிமீ தூரம் கொண்ட மும்பை- தானே இடையிலான தூரத்தை 57 நிமிடங்களில் கடந்துச்சாக்கும்.
இந்தியாவில் பயணிகள் ரயில் ஓடத் துவங்கி இன்றுடன் 169 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இந்தியாவில் ஆங்கிலேயர்களின் முயற்சியில் 1853ம் ஆண்டு முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. மும்பை- தானே இடையே 1853ம் ஆண்டு ஏப்ரல் 16ந் தேதி பிற்பகல் 3.35 மணிக்கு 34 கிமீ தூரத்துக்கு முதல் ரயில் இயக்கப்பட்டது.
மும்பை- தானே இடையிலான தூரத்தை 57 நிமிடங்களில் கடந்தது. இந்தியாவின் முதல் பயணிகள் ரயிலில் சிறப்பு அழைப்பின் பேரில் வந்த 400 பேர் பயணித்தனர். அந்த ரயில் 14 பெட்டிகளை கொண்டிருந்தது. அன்றைக்கு மும்பை நகரில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவின் இன்று மிக முக்கிய போக்குவரத்து சாதனமான ரயில் போக்குவரத்துக்கு வித்திட்டவர் இந்தியாவின் இளம் ஆங்கிலேய கவர்னர் ஜெனரலாக பொறுப்பு வகித்த டல்ஹவுசிதான். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்திய ரயில்வே திட்டத்தை வெற்றி பெறச் செய்தவர் இவர்தான். இந்தியர்கள் நலனுக்காக அல்ல. அவர்களது வியாபார நலனை கருத்தில்க்கொண்டே இந்திய ரயில்வே திட்டம் அனுமதி பெற்றது.
இந்தியாவில் மெட்ராஸில்தான் முதல் ரயில் விட திட்டமிடப்பட்டது. மேலும், சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து செங்குன்றம் வரைதான் அமைக்கப்பட்டது. இந்தியாவின் முதல் சரக்கு ரயில் இந்த பாதையில்தான் சோதனை நடத்தப்பட்டது.
துறைமுக நகரங்களை குறிவைத்தே ரயில் திட்டத்தை ஆங்கிலேயர்கள் நிறைவேற்றினர். கொல்கத்தா, மும்பை, மெட்ராஸ் ஆகியவற்றை குறிவைத்து திட்டங்களை செயல்படுத்தினர். அதன்படி, மெட்ராஸ் துறைமுகத்தை இணைக்கும் விதத்தில் ரயில்பாதை திட்டத்தை கையிலெடுத்தனர். 1945ம் ஆண்டு திட்டம் துவங்கப்பட்டாலும், பல்வேறு காரணங்களால் காலதாமதம் ஏற்பட்டு, ஒருவழியாக தமிழகத்தின் முதலாவதாக ராயபுரத்தில் அமைக்கப்பட்டது. அடிக்கல் நாட்டு விழாவில் ஆற்காடு நவாப் ஒரு சுவாரஸ்யத்தை நிகழ்த்தினார்.
ராயபுரம் ரயில்நிலையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில், ஆற்காடு நவாப் தங்க மண்வெட்டியை பயன்படுத்தி அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து, பணிகள் நிறைவுற்று 1856ம் ஆண்டு ஜூன் 28ந் தேதி ராயபுரம் ரயில் நிலையத்தை மெட்ராஸ் ஆளுநராக இருந்த ஹாரிஸ் பிரபு திறந்து வைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu