சர்வதேச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்தியாவின் தல்வீர் பண்டாரி தேர்வு
தல்வீர் பண்டாரி
சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த நீதிபதி தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தல்வீர் பண்டாரி நமது நாட்டின் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவும், மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாகவும் ஏற்கனவே பணியாற்றி உள்ளார்.
சர்வதேச நீதிமன்றத்தின் உறுப்பினராக இருந்து வந்த இவர் தலைமை நீதிபதி பதவிக்கு போட்டியிட்டார்.அவரை எதிர்த்து பிரிட்டனின் நீதிபதி கிறிஸ்டோபர் கிரீன்வுட் நிறுத்தப்பட்டு இருந்தார்.
இந்த போட்டியில் இந்தியாவின் நீதிபதி தல்வீர் பண்டாரி மொத்தம் உள்ள 193 வாக்குகளில் 183 வாக்குகள் (ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஒருவர் பிரதிநிதித்துவம்) பெற்று பிரிட்டனின் நீதிபதி கிறிஸ்டோபர் கிரீன்வுட்டை தோற்கடித்தார்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வெற்றியின் மூலம் சர்வதேச நீதிமன்றத்தில் இங்கிலாந்தின் 71 ஆண்டுகால ஏகபோகத்தை இந்தியா முறியடித்து உள்ளது. இந்த வெற்றியை அடைவதற்கு பிரதமர் மோடியும், வெளியுறவு அமைச்சகமும் கடந்த 6 மாதங்களாக உழைத்து வந்ததாக கூறப்பட்டு வருகிறது. நீதிபதி தல்வீர் பண்டாரி 9 ஆண்டுகள் இந்தப் பதவியில் இருப்பார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu