இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 200 ஆக உயர்வு

தென் ஆப்பிரிக்காவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியா உள்பட 90 நாடுகளுக்கு பரவி விட்டது.
இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு மாநிலங்களிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
மகாராஷ்டிரா-தலைநகர் டெல்லியில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் தலா 54 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் டெல்லி, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் 19 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது.
தெலுங்கானாவில் 20 பேரும், கர்நாடகாவில் 19 பேரும், ராஜஸ்தானில் 18 பேரும், கேரளாவில் 15 பேரும், குஜராத்தில் 14 பேரும், தமிழகத்தில் ஒருவரும் ஒமிக்ரான் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்.
இந்தியாவில் இன்று ஒமிக்ரான்பாதிப்பு 200 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ துறை தெரிவித்துள்ளது. இவர்களை தனிமைபடுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு லேசான ஒமிக்ரான் அறிகுறி இருப்பதாகவும், சிகிச்சைக்கு பின் மகாராஷ்டிரா, கர்நாடகம், டெல்லியில் 77 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமும் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu