இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரித்துள்ளது
X
By - C.Vaidyanathan, Sub Editor |9 July 2022 11:32 AM IST
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18, 840 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 18,815-ஐ விட சற்று அதிகமாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 16,104 பேர் குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 28 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu