ஆப்கனை விட்டு வெளியேற இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுரை
ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுவரை அங்கு 2 மாகாணங்களை தங்களது கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய துணைத்தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், மஜார் ஐ ஷரீப் நகரில் இருந்து இந்தியாவிற்கு சிறப்பு விமானம் ஒன்று இன்று மாலை இயக்கப்பட உள்ளது. நகர் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் இந்தியர்கள், அந்த விமானத்தில் தாயகம் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தாயகம் திரும்ப விரும்புபவர்கள் உடனடியாக தங்களது பெயர் மற்றும் பாஸ்போர்ட் விவரங்களை உடனடியாக அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.
ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல் நடத்த துவங்கியதை தொடர்ந்து, அங்குள்ள தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரிகள், சிறப்பு விமானம் மூலம் டில்லி அழைத்து வரப்பட்டனர். தற்போது, ஆப்கனில், 1,500 இந்தியர்கள் உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu