/* */

1000 க்கு மேற்பட்ட சிறைவாசிகளுக்கு விளையாட்டு பயிற்சி - இந்தியன்ஆயில் நிறுவனம் தொடங்கியது

சிறைவாசிகள், தங்கள் உடல்நலத்தை மேம்படுத்திக் கொள்ளவும், உளவியல் சார்ந்த சிக்கல்களை எதிர்கொண்டு வெற்றி பெறவும் உதவும்

HIGHLIGHTS

1000 க்கு மேற்பட்ட சிறைவாசிகளுக்கு விளையாட்டு பயிற்சி - இந்தியன்ஆயில் நிறுவனம் தொடங்கியது
X

இந்தியன்ஆயில் நிறுவனம் சிறையிலிருந்து கௌரவம் பெறச் செய்கிற முன்முயற்சி நடவடிக்கையான பரிவர்த்தன் திட்டத்தின் வாயிலாக பத்து மாநிலங்களின் 17 சிறைச்சாலைகளில் உள்ள சிறைவாசிளுக்கு குறிப்பிட்ட விளையாட்டுகளில் பயிற்சி அளிக்க வழிவகை செய்துள்ளது.

புதுதில்லி திகார் சிறைச்சாலையில், மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினக் கொண்டாட்டத்தின் பகுதியாக , இந்த முன்முயற்சி நிகழ்வு, இந்தியன்ஆயில் தலைவர் ஶ்ரீகாந்த் மாதவ் வைத்யாவால் நேரடியாக தொடங்கி வைக்கப்பட்டது. அதே வேளையில், இந்த பயிற்சி முகாம் மேலும் எட்டு இடங்களில் இணைய வழியில் தொடங்கி வைக்கப்பட்டது.

பரிவர்த்தன் முன்முயற்சியானது, மிகச்சிறந்த வாழ்வைப் பெற்றிடவும் அவர்களுடைய தன்னம்பிக்கை மற்றும் தன்மானம் மேம்படவும் அதிக அளவில் உறுதுணை புரிகிறது . சிறைவாசத்தால் ஏற்படுகிற சிக்கலை எதிர்கொண்டு, விடுதலைக்குப் பின் சமூகத்தில் சுமூகமாக மறுவாழ்வு வாழ்ந்திட இந்த திட்டம் சிறைவாசிகளுக்கு கைகொடுக்கிறது.

இரண்டாம் கட்ட நிகழ்வில் , இந்தியன்ஆயில் நிறுவனமானது ,இந்தியாவெங்கிலும் அந்தந்த மாநில காவல்துறையின் சிறைத்துறையினருடன் கலந்து பேசி, கூடைப்பந்து, பேட்மின்ட்டன், கைப்பந்து, சதுரங்கம், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், கோ-கோ, கேரம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சிகளை வழங்கிடும். இப்படிப்பட்ட விளையாட்டுப் பயிற்சியானது, சிறைவாசிகள், உடல் நலத்தையும் மனநலனையும் குறிப்பாக இந்த பெருந்தொற்று காலத்தில் நன்றாகப் பேணிப் பாதுகாக்க பெரிதும் உதவும். நான்கு வாரங்கள் மேற்கொள்ளப்படும் இந்த பயிற்சி நிகழ்வில், மனமகிழ் நிகழ்ச்சிகள் மற்றும் உள்ளூர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஏதுவாக, பல்வேறு சிறைச்சாலைகளைச் சார்ந்த 1000-க்கு மேற்பட்ட சிறைக்கைதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த நிகழ்வுக்கான உபகரணங்கள் மற்றும் விளையாட்டுக் கருவிகளை இந்தியன்ஆயில் வழங்கும்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு வைத்யா அவர்கள் கூறியதாவது - 'சமூகத்தால் புறக்கணிக்கப்ட்ட சிறைக்கைதிகளுக்கு தெம்பூட்டும் வகையில் பரிவர்த்தன் முன்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. விளையாட்டு போன்ற விறுவிறுப்பான செயல்களில் அவர்களை ஈடுபடுத்துவதன் மூலமாக அவர்களுக்கு மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் கிட்டும் என்பதில் ஐயமில்லை'. அவர் மேலும் பேசுகையில் நாடெங்கிலுமுள்ள சிறைத்துறை அதிகாரிகளுக்கு இந்த செயல்திட்டத்தை நடைதுறைப்படுத்த ஒத்துழைப்பு நல்கியதற்காக தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் அவர் கூறியதாவது - 'இந்த உன்னத திட்டம், சிறைவாசிகள், தங்கள் உடல்நலத்தை மேம்படுத்திக் கொள்ளவும் கவலை, பதற்றம், வருத்தம், சுயபச்சாதாபம் உள்ளிட்ட உளவியல் சார்ந்த சிக்கல்களை நன்றாக எதிர்கொண்டு வெற்றி பெறவும் உறுதுணை புரியும்.

'பரிவர்த்தன் சிறைவாசிகளின் மனங்களில், சுய கௌரவம், தன்மானம், கம்பீரம், சிநேகம் ஆகிய பண்புகளை விதைத்து, அவர்கள் மறுவாழ்வில் தாழ்வு மனப்பான்மை ஏதுமின்றி இயங்க வைக்கிறது.' என்று தெரிவித்தார்.

பரிவர்த்தன் திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வில் பங்கேற்கும் சிறைகளாவன - தில்லி திகார் மத்திய சிறை, புனே யெரவாடா மத்திய சிறை, கோலாப்பூர் மத்திய சிறை, பாட்டியாலா மத்திய சிறை, லாலா லஜபத் ராய் மாவட்டம், தர்மசாலா திறந்தவெளி சிறை, இந்தூர் மத்திய சிறை, போபால் மத்திய சிறை, அகமதாபாத் மத்திய சிறை, வதோதரா,ஆதர்ஷ் கார்கர், லக்னோ, வாரணாசி மத்திய சிறை, பிரயாக்ராஜ் நாயினி மத்திய சிறை, கவுஹாத்தி மத்திய சிறை, திப்ருகர் மத்திய சிறை, திமாபூர் மத்திய சிறை. இந்த நிகழ்வில் சர்வதேச அளவிலான விளையாட்டு வீர ர்கள், இந்தியன்ஆயில் உடன் தோள் கொடுக்க தயாராக உள்ளார்கள். பயிற்சி அளிக்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளில் பின்வரும் ஆளுமைகள் அடங்குவார்கள் - மஞ்சுஷா கன்வர் (முன்னாள் தேசிய சாம்பியன்), அபின் ஷியாம் குப்தா (அர்ஜுனா விருது பெற்றவர்), பேட்மின்ட்டன், மகளிர் கிராண்ட்மாஸ்டர்கள் ஈஷா கரவடே, சௌம்யா ஸ்வாமிநாதன் & கிராண்ட் மாஸ்டர் எஸ் எஸ் கங்குலி, டென்னிஸ் ஆட்டக்காரர் ருஷ்மி சக்ரவர்த்தி (தேசிய சாம்பியன்) டிடி அர்ஜுனா விருது பெற்றவரான சௌம்யாதீப் மற்றும் புகழ்பெற்ற கேரம் ஆட்டக்காரர்கள் - யோகேஷ் பர்தேசி, முகம்மது குப்ரான், காஜல் குமாரி, ரமேஷ் பாபு.

முதல் கட்டத்தின் போது, பின்வரும் சிறைச்சாலைகளில் பரிவர்த்தன் செயல்படுத்தப்பட்டது - ஐதராபாத் சாஞ்சாலக்குடா மத்திய சிறை, சென்னை புழல் மத்திய சிறை, திருவனந்தபுரம் பூஜப்புரா மத்திய சிறை, புவனேஸ்வர் சிறப்பு சிறைச்சாலை, கட்டாக் வட்ட சிறை. இந்த அமைவிடங்களில் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. வெற்றிகரமாக பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தற்போதைய நிலையில், தமிழ்நாடு, கேரளம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 30 விற்பனை நிலையங்களில், தங்கள் சிறைக்காலத்தை முடித்து வெளியே வந்த சிறைவாசிகளை வாடிக்கையாளர் உதவியாளராக இந்தியன்ஆயில் நிறுவனம் பணிக்கு அமர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 2 Oct 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!