பராமரிப்பு பணிகள் காரணமாக நாடு முழுவதும் 240 ரயில்கள் ரத்து
பைல் படம்.
இந்திய ரயில்வே வானிலை, பராமரிப்பு மற்றும் வேலை காரணங்களால் மார்ச் 9 ம் தேதி (வியாழக்கிழமை) 240 க்கும் மேற்பட்ட ரயில்களை ரத்து செய்துள்ளது. இது தவிர, இன்று மொத்தம் 87 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்திய ரயில்வே பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒவ்வொரு வாரமும் பொறியியல் பணிகளை மேற்கொள்கிறது. இதனால் சில வழித்தடங்களில் ரயில் இயக்கங்களில் இடையூறு ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இது பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ரயில்கள் ரத்து குறித்து indianrail.gov.in/mntes என்ற இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பயணிகள் சரிபார்த்துக் கொள்ளலாம் என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டடுள்ளது. இந்த அதிகாரப்பூரவ போர்ட்டலில் முழுமையாக அல்லது பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் முழு பட்டியலையும் பயணிகள் தெரிந்து கொள்ளலாம்.
இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரங்கள்:
1) 01135 புசாவல் -டவுண்ட் மெமு ஜேசிஓ 09.03.2023
2) 01136 டவுன்ட் - புசாவல் மெமு ஜேசிஓ 09.03.2023
3) 11409 டவுன்ட்-நிஜாமாபாத் எக்ஸ்பிரஸ் ஜேசிஓ 01.03.2023 முதல் 24.03.2023 வரை
4) 11410 நிஜாமாபாத்-புனே எக்ஸ்பிரஸ் ஜேசிஓ 01.03.2023 முதல் 26.03.2023 வரை
6) பூண்டூவாவிலிருந்து: 37614
7) பர்தாமானிடமிருந்து: 37834,37840
8) தாரகேஸ்வரிலிருந்து: 37354
9) குராப்பிலிருந்து: 36072
10) ஸ்ரீராம்பூரிலிருந்து: 37012
11) மாசகிராமிலிருந்து: 36086
இதனையடுத்து அங்கீகரிக்கப்படாத முகவர்கள் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை எந்தத் தொகையும் திரும்பப் பெறாமல் முழு பணத்தையும் விடுவிக்கலாம் என ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகள் தங்கள் திட்டமிடப்பட்ட பயணம் மற்றும் சரியான நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தல் பற்றிய அனைத்து அறிவிப்புகளையும் பெற தங்கள் மொபைல் எண்களை சரியாக பதிவு செய்யுமாறு ரயில்வே துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஹோலி பண்டிகைக் கூட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கவும், முக்கிய நகரங்களில் உள்ள பல்வேறு இடங்களுக்கு இடையே இணைப்பை வழங்கவும் 196 சிறப்பு ரயில்களை இயக்குவதாகவும் ரயில்வே அறிவித்துள்ளது. டெல்லி-பாட்னா, டெல்லி-பகல்பூர், டெல்லி-முசாபர்பூர், டெல்லி-சஹர்சா, கோரக்பூர்-மும்பை, கொல்கத்தா-பூரி, கவுகாத்தி-ராஞ்சி, புது தில்லி-ஸ்ரீ மாதா வைஷ்ணோ போன்ற வழித்தடங்களில் நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களை இணைக்க சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu