ரயில்களில் கார்களை ஏற்றிச் செல்வதில் இந்திய ரயில்வே சாதனை
ஆட்டோமொபைல் வாகனங்களை அதிக அளவில் நீண்ட தொலைவுக்கு எடுத்துச் சென்று ஆட்டோமொபைல் துறைக்கு இந்திய ரயில்வே உதவி வருகிறது. ரயில்கள் மூலம் கார்களை ஏற்றிச் செல்லும் அளவு, கடந்த சில ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் ஏற்படக்கூடிய கார்பன் உமிழ்வின் அளவை குறைத்து ஆட்டோமொபைல் துறைக்கு இந்திய ரயில்வே உதவி வருகிறது.
இதற்காக, ஆட்டோமொபைல் துறையினரின் கோரிக்கைகளுக்கு ஏற்ப பல்வேறு கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டு, வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஆட்டோ மொபைல் துறையினரின் தேவைக்கேற்ப ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2019-20 நிதியாண்டில் 1599 ரயில் பெட்டிகளில் கார்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இது 2020-21 நிதியாண்டில் 2681 ஆக உயர்ந்து, தற்போது 2022-23 நிதியாண்டில் ஆகஸ்ட் மாதத்திற்குள் 2206 பெட்டிகள் என்ற அளவை எட்டி விட்டது.
கடந்த 2021-22 நிதியாண்டில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 320 ரயில் பெட்டிகள் என்ற அளவு, 2022 ஆகஸ்ட் மாதத்தில் 508 பெட்டிகளாக உயர்ந்துள்ளது. கடந்த 2021-22ஆம் ஆண்டில் உள்நாட்டு ரெயில் போக்குவரத்து மூலம் கார்களை ஏற்றிச் செல்லும் அளவு 16 சதவீதம் உயர்ந்துள்ளது என ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu