பெயர் மாறும் சட்டங்கள்.. ‘இந்திய’ பதில் ‘பாரதிய’.. மசோதா தாக்கல்
உள்துறை அமைச்சர் அமித்ஷா.
bhartiya nyay sanhita bill - இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட 3 முக்கிய சட்டங்களின் பெயரை மாற்றம் செய்வதற்கான மசோதாவைமக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்தார்.
கடந்த 1860ம் ஆண்டில் ஐபிசி என அழைக்கப்படும் இந்திய தண்டனைச் சட்டம் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.160 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பின் மையமாக இருந்து வருகிறது.
இந்தநிலையில், இந்திய தண்டனை சட்டம் தொடர்பான 3 புதிய மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.
Indian Penal Code
இதுகுறித்து அமித்ஷா பேசுகையில், 1860 முதல் 2023 வரை, நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட சட்டங்களின்படி செயல்பட்டு வருகிறது. தற்போது மூன்று சட்டங்கள் மாற்றப்படும் நிலையில், குற்றவியல் நீதி அமைப்பில் பெரிய மாற்றம் ஏற்படும் என்று கூறினார்.
அதன்படி இந்திய தண்டனைச் சட்டம் (IPC), குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் (IEA) ஆகியவற்றை பாரதிய நியாய சங்ஹிதா, பாரதிய சக் ஷ்யா, பாரதிய நக்ரிக் சுரக்ச சன்ஹிதா என அழைக்கப்படும் என அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த மசோதாவை எதிக்கட்சிகள் எதிர்ப்பார்களா என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu