இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்திற்கு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு தடை

'இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்' (சிமி) யுஏபிஏ சட்டத்தின் கீழ் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு சட்டவிரோத இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 1967-ன் பிரிவு 3 (1)-ன் கீழ் 'இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் (சிமி)’ மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு 'சட்டவிரோத இயக்கமாக' மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2019 ஜனவரி 31-ம் தேதியிட்ட அறிவிப்பு எண் எஸ்.ஓ. 564 (இ) மூலம் சிமி மீது தடை விதிக்கப்பட்டது.
இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு, ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் நாட்டில் அமைதி, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பயங்கரவாதத்தை தூண்டிவிடுவதில் சிமி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 உட்பட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் சிமி மற்றும் அதன் உறுப்பினர்கள் மீது பல குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu