எல்லைத் தாண்டி மீன் பிடித்த 6 இலங்கை மீனவர்கள் கைது: இந்திய கடலோர காவல் படை அதிரடி
இந்திய கடலோர காவல் படையைச் சேர்ந்த கப்பல் 'அமேயா' நாகப்பட்டினம் சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் இன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, இலங்கையை சேர்ந்த படகு எல்லைத் தாண்டி இந்திய பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இது இந்திய கடல்சார் பகுதிகள் (வெளிநாட்டவர்கள் மீன்பிடித்தலை ஒழுங்குப்படுத்துதல்) சட்டம் 1981 படி குற்றமாகும். எனவே, இலங்கைப் படகில் வந்த 6 பேரையும் கைது செய்து, நாகப்பட்டினம் மெரைன் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்திய கடலோர காவல்படை மற்றத் துறையினருடன் இணைந்து இலங்கை சர்வதேச கடல் எல்லையை தீவிரமாக கண்காணித்து வருகிறது என மக்கள் தொடர்பு அலுவலர், (பாதுகாப்பு அமைச்சகம்) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu