இந்திய தணிக்கை, வருவாய், புள்ளியியல் பணி பயிற்சி அதிகாரிகள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு
பயிற்சி அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசுத்தலைவர்.
இந்திய தணிக்கை மற்றும் கணக்குப் பணி, இந்திய வருவாய்ப் பணி (சுங்கம் மற்றும் மறைமுக வரிகள்), இந்திய புள்ளிவிவரப் பணி ஆகியவற்றின் பயிற்சி அதிகாரிகள் இன்று (டிசம்பர் 26, 2023) குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய குடியரசுத் தலைவர், அரசு நிர்வாகத்தில் முக்கிய பதவிகளை வகிக்கும் போது நாட்டுக்கு சேவையாற்றுவதற்கான வாய்ப்பு கிடைப்பதாகக் குறிப்பிட்டார் . அவர்கள் அந்தந்தத் துறைகளில் புதுமையான, புத்திசாலித்தனமான மக்களை மையமாகக் கொண்ட செயல்பாட்டின் மூலம் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் மகத்தான பங்களிப்பை வழங்க முடியும்.
அவர்களின் நடவடிக்கைகள், முடிவுகள் அனைத்து குடிமக்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பணியில் செலுத்தும் நேர்மை, கடின உழைப்பு ஆகியவை நமது மக்களின் வளர்ச்சியின் வேகத்தைத் தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கும் என்று அவர் கூறினார்.
அவர்கள் பொது நம்பிக்கையின் பாதுகாவலர்களாகவும், நிதி விவேகத்தின் பாதுகாவலர்களாகவும் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர். முடிவுகளை எடுக்கும் போதும், நடவடிக்கை எடுக்கும் போதும் உண்மை, வெளிப்படைத்தன்மை, நியாயம் ஆகிய விழுமியங்களை அவர்கள் எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும்.
பல ஆண்டுகளாக நிர்வாக அமைப்பில் தனது நிலையை வலுப்படுத்திய அத்தகைய அமைப்பின் ஒரு பகுதியாக இருப்பதில் அவர்கள் பெருமைப்பட வேண்டும் என்று அவர் கூறினார். இந்த வளமான பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவர்களைப் போன்ற இளம் அதிகாரிகளின் கடமையாகும் என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu