இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து

இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து
X

பைல் படம்.

இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தின் மண்டலா மலைப் பகுதியில் இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. விமானிகளைத் தேடும் பணி தொடங்கியுள்ளதாக இந்திய இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 09:15 மணியளவில் அருணாச்சல பிரதேசம் மாநிலம் போம்டிலா அருகே பறந்து கொண்டிருந்த இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஏவியேஷன் சீட்டா ஹெலிகாப்டர் உடனான தொடர்பிலிருந்து விலகி சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சீட்டா ஹெலிகாப்டர் போம்டிலாவின் மேற்கே மண்டலா அருகே விபத்துக்குள்ளானதாகவும், ஹெலிகாப்டரை தேடும் பணிகளை முடுக்கி விட்டுள்ளதாகவும் ராணுவத் துறையின் செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் மகேந்திர ராவத் தெரிவித்துள்ளார். மேலும் எந்த தகவலும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Tags

Next Story