தங்கம் வென்றது இந்தியா: ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா சாதனை

தங்கம் வென்றது இந்தியா: ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா சாதனை
X
டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற சாதனை படைத்தார். இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது. இது தடகள போட்டியில் இந்தியா வெல்லும் முதல் தங்கம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 32வது ஒலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பைனலில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா 23, 87.58 மீ., துாரம் எறிந்து முதலிடத்தை கைப்பற்றி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

இது, ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம். தவிர, டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம். இம்முறை இந்தியாவுக்கு ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என, 7 பதக்கம் கிடைத்துள்ளன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!