கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டி: பெங்களூருவில் நாளை துவக்கம்

கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டி: பெங்களூருவில் நாளை துவக்கம்
X

கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் பெங்களூருவில் ஏப்ரல் 24-ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிகழ்சியில் பிரதமர் உரையாற்றுகிறார்

கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் பெங்களூருவில் நாளை ஏப்ரல் 24-ஆம் தேதி தொடங்குவது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இளம் விளையாட்டு வீரர்களின் திறன்களை வளர்ப்பதில் இந்த விளையாட்டு போட்டிகள் பெரிதும் உதவிடும் என்று திரு மோடி கூறினார். விளையாட்டுப் போட்டிகள் நாளை மாலை தொடங்குவது குறித்த தனது செய்தியையும் பகிர்ந்து கொள்வதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது;

கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் ஏப்ரல் 24-ஆம் தேதி பெங்களூருவில் தொடங்கி வைக்கப்படுவது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். இந்த விளையாட்டுகள் இளம் விளையாட்டு வீரர்களின் திறமைகளை வளர்ப்பதில் நீண்ட பயணமாகும். நாளை மாலை விளையாட்டு போட்டிகள் தொடங்கும் போது எனது செய்தியையும் பகிர்ந்து கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!