அதிவேக அபியாஸ் விமான சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ, அதன் வானூர்தி வளர்ச்சி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட 'அபியாஸ்' விமானத்தின் சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.
ஒடிசா கடற்கரையில் உள்ள சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை ரேஞ்சிலிருந்து (ஐடிஆர்) உள்நாட்டில் உருவாக்கப்பட்ட, அதிவேக வான்வழி இலக்கு (high-speed expendable aerial target (HEAT) வாகனமான அபியாஸ், வானில் பறக்கவிட்டு சோதனை செய்யப்பட்டது.
ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழகத்தால் உருவாக்கப்பட்ட இந்த அபியாஸ் காண்பதற்கு சிறிய ரக விமானம்போல இருந்தாலும், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அபியாஸ், எதிரிகளின் வான் இலக்கை துல்லியமாக தாக்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறைந்த உயரத்தில் இந்த விமானத்தின் செயல்திறன், நிலைத்தன்மை உட்பட, பல விஷயங்கள் சோதனை செய்யப்பட்டன. அபியாஸின் விமான சோதனை வெற்றிகரமாக நடந்ததற்காக டிஆர்டிஓ மற்றும் ஆயுதப்படைகளுக்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu