இந்தியா முதல்முறையாக ரஷ்யாவை கண்டித்து அதிர்ச்சி கொடுத்திருக்கின்றது
உக்ரைன் ரஷ்ய போரில் இதுவரை மவுனமாக இருந்த இந்தியா நேற்று முதல்முறையாக ரஷ்யாவை கண்டித்து உலகுக்கே அதிர்ச்சி கொடுத்திருக்கின்றது.
ரஷ்யா, உக்ரைனில் செய்த மனுகுல கொடுமைகளை கண்டித்து ஐநாவில் தீர்மானம் கொண்டுவரபட்டது. இதில் இந்தியா ரஷ்யாவின் போர்குற்றங்களை கடுமையாக கண்டிப்பதாக பேசியிருப்பது, அதாவது ஐநாவுக்கான இந்திய தூதர் ஐ.நா. பிரதிநிதி திருமூர்த்தி, மனித உயிர்களைப் பறிப்பது எந்த பிரச்னைக்கும் தீர்வாகாது என்று பேசியிருப்பது ரஷ்ய தரப்புக்கு கடும் அதிர்ச்சியினை கொடுத்துள்ளது.
உக்ரைனில் நேரிட்டு வரும் சம்பவங்கள் இந்தியாவை பெரிதும் வருத்தமடையச் செய்துள்ளன. உக்ரைனில் உடனடியாக வன்முறையை கைவிட்டு போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என இந்தியா வலியுறுத்துகிறது. மனித உயிர்களைப் பறிப்பதன் மூலம் எந்த பிரச்னைக்கும் தீர்வு காணமுடியாது என இந்தியா நம்புகிறது.
உக்ரைனில் உள்ள மாணவர்கள் உள்பட இந்தியர்களின் நலன் குறித்து அரசு பெரும் கவலை கொண்டுள்ளது. ஐ.நா. வகுத்துள்ள சர்வதேச விதிகளை அனைவரும் பின்பற்றவும், ஒவ்வொரு நாட்டின் இறையாண்மையையும் எல்லையையும் மதித்து நடக்க இந்தியா வலியுறுத்துகிறது. இந்தியா குவாட் அமைப்பில் தன்னை தக்க வைக்கவும், ரஷ்யாவினை முழுக்க நம்பி உலகின் விரோதத்தை சம்பாதிக்கவும் தயார் இல்லை என்பதற்காக இம்முடிவினை எடுத்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu