உலகிலேயே மிகவும் மாசடைந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 8வது இடம்

உலகிலேயே மிகவும்  மாசடைந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 8வது இடம்
X

பைல் படம்.

2022ம் ஆண்டில் உலகிலேயே மிகவும் மாசடைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 8வது இடத்தில் உள்ளது.

2022ம் ஆண்டில் சர்வதேச அளவில் காற்றின் தரம் குறித்த ஆய்வறிக்கையை சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஐகியூஆர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 131 நாடுகளில் 30,000 சோதனை கருவிகள் மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையின் படி, உலகிலேயே மாசடைந்த நாடுகள் பட்டியலில் சாத் நாடு முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் ஈராக் உள்ளது. மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானும் நான்காவது இடத்தில் பஹ்ரைனும் உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு 5-வது இடத்தில் இருந்த இந்தியா 2022ம் ஆண்டில் எட்டாவது இடத்தில் உள்ளது.

உலக சுகாதார நிறுவனம் அனுமதிக்கப்பட்ட அளவை விட இந்தியாவில் காற்றின் தரம் 10 மடங்கு அதிகமாக உள்ளது. உலகில் மிகவும் மாசடைந்த நகரங்கள் பட்டியலில் பாகிஸ்தானை சேர்ந்த லாகூர் முதலிடத்திலும் சீனாவைச் சேர்ந்த ஹோட்டன் நகரம் இரண்டாவது இடத்திலும் உள்ளது. ராஜஸ்தானி உள்ள பிஹிவாடி மற்றும் டெல்லி நகரங்கள் மூன்றாவது இடத்திலும் நான்காவது இடத்திலும் உள்ளது. டெல்லியில் உள்ள மாசு அனுமதிக்கப்பட்ட அளவை விட 20 மடங்கு அதிகமாக உள்ளது.

இந்தியாவில் உள்ள மெட்ரோ நகரங்களான கொல்கத்தா 99 வது இடத்திலும் மும்பை 137வது இடத்திலும் ஹைதராபாத் 199வது இடத்திலும் பெங்களூரு 440வது இடத்திலும் சென்னை 682வது இடத்திலும் உள்ளது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil