பசுமைவாயு வெளியேற்றத்தில் இந்தியா 103-வது இடம்: ஐஐடி பேராசிரியர் தகவல்

பசுமைவாயு வெளியேற்றத்தில் இந்தியா 103-வது இடம்:  ஐஐடி பேராசிரியர் தகவல்
X
எரிசக்தி தொழில்நுட்பம் குறித்த தேசிய மாநாட்டிற்கு ஐஐடி மெட்ராஸ், ஏஆர்சிஐ, & ஐஎன்ஏஇ ஏற்பாடு செய்திருந்தது

எரிசக்தி தொழில்நுட்பம் குறித்த தேசிய மாநாட்டிற்கு ஐஐடி மெட்ராஸ், ஏஆர்சிஐ, & ஐஎன்ஏஇ ஆகியவை ஏப்ரல் 29, 30 ஆகிய தினங்களில் ஏற்பாடு செய்திருந்தது.

கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும், பரிமாறி கொள்வதற்கும் பொதுவான தடத்தை உருவாக்குதல், வளர்ந்து வரும் தேசிய மற்றும் உலகளாவிய ஆராய்ச்சி சூழ்நிலைகள் குறித்து ஆலோசித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில் ஒத்துழைப்புக்கான வழிமுறைகளை ஏற்படுத்துதல் ஆகியவை இந்த தேசிய மாநாட்டின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.

ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் மற்றும் பேட்டரி, எரிபொருள் செல்கள், அதிநவீன கெபாசிட்டர்கள், சூரிய மற்றும் காற்றாலை ஆற்றல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் அனைத்து அம்சங்களிலும் அனுபவங்கள் மற்றும் ஆராய்ச்சி முடிவுகளை பரிமாறிக்கொள்ள முன்னணி கல்வித்துறை அறிவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், அறிஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை இம்மாநாடு ஒன்றிணைத்தது.

இந்நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக பேசிய இந்திய அணுசக்தி எரிசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் அனில் ககோட்கர், புதைபடிவ எரிபொருட்களை முற்றிலுமாக தவிர்க்கும் வகையில் இந்தியாவின் ஆற்றல் மாற்றத்திற்கான முன்னேற்ற வழி குறித்து எடுத்துரைத்தார். நிகர-பூஜ்ஜிய இலக்கை எட்ட 'உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட' தீர்வுகளின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் பேசிய ஐஐடி மெட்ராசின் இயக்குனர் பேராசிரியர் காமகோட்டி, எரிசக்தி தணிக்கை மற்றும் மின்சாரத்தை சேமிப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.

ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி பூங்கா தலைவர் பேராசிரியர் அசோக் ஜூன்வாலா

'எவ்வளவு விரைவில் இந்தியா நெட்-ஜீரோவை அடைய முடியும்' என்ற தலைப்பில் தனது ஆய்வை வழங்கினார். புவி வெப்பமடைதலுக்கு நாடுகள் அதிக பங்களிப்பை வழங்குகின்றன, அதே நேரத்தில் இந்தியா பசுமை வாயு வெளியேற்றத்தில் 103 வது இடத்தில் உள்ளது என்று தெரிவித்தார். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 14 அறிவியலாளர்கள், கல்வியாளர்கள், தொழில்துறை நிபுணர்கள் ஆகியோர் எரிசக்தி தொழில்நுட்பம் குறித்து உரை நிகழ்த்தினார்கள்.



Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!