இந்தியா லோக்சபாவுக்கு தேர்தல் நடத்த வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை 544 ஆக உயர்ந்தது ஏன்?....

இந்தியா லோக்சபாவுக்கு தேர்தல் நடத்த வேண்டிய  தொகுதிகளின்  எண்ணிக்கை 544 ஆக உயர்ந்தது ஏன்?....
X
India Lokshaba Seats இந்திய லோக்சபாவின் தேர்தல் நடத்தவேண்டிய தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 543. ஆனால் இந்த தேர்தலில் 544 என காட்டப்பட்டுள்ளது. இதற்கான விளக்கத்தினை தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். படிங்க...

India Lokshaba Seats

இந்தியாவின் 18 வது லோக்சபாவுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ந்தேதியன்று ஒரே கட்டமாக நடக்க உள்ளது. அட்டவணை வெளியிடப்பட்டதால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமல்படுத்தப்பட்டு விட்டது.

முதற்கட்டஓட்டுப்பதிவானது ஏப்ரல் 19 ந்தேதியன்று 102 தொகுதிகளுக்கு 21 மாநிலங்களில் நடக்க உள்ளது. இரண்டாவது கட்டமாக 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 அன்று வாக்குப்பதிவானது நடக்க உள்ளது.மூன்றாம் கட்டமாக 12 மாநிலங்களில் மே 7ந்தேதியன்று 94 தொகுதிகளுக்கு நடக்க உள்ளது. நான்காவது கட்ட தேர்தலானது மே 13 ந்தேதியன்று 10 மாநிலங்களிலுள்ள 96 தொகுதிகளில் நடக்க உள்ளது.

India Lokshaba Seats



ஐந்தாவது கட்ட தேர்தலானது மே 20 ந்தேதியன்று 8 மாநிலங்களிலுள்ள 49 தொகுதிகளுக்கு நடக்க உள்ளது. ஆறாம் கட்ட தேர்தலானது 7 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு மே 25 ந்தேதியன்று நடக்க உள்ளது.ஏழாம் கட்ட தேர்தலானது ஜூன் மாதம் 1ந்தேதியன்று 8 மாநிலங்களிலுள்ள 57 தொகுதிகளுக்கு நடக்க உள்ளது.

அதன் பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அனைத்து தொகுதிகளுக்கும் ஜூன் 4 ந்தேதியன்று ஒரே கட்டமாக வாக்கு எண்ணிக்கையானது நடக்க உள்ளது. அன்றைய தேதியில் யார் இந்திய நாட்டின் பிரதமர் என்பது தெரிந்துவிடும்.வழக்கமாகவே இந்திய லோக்சபாவின் மொத்த எண்ணிக்கையானது 543 தான். ஆனால் இந்த முறை ஒரு தொகுதி சேர்த்து 544 ஆக கூடியுள்ளது அது ஏன்? தெரியுமா? படிங்க... தேர்தல் கமிஷன் இதற்கு உரிய விளக்கத்தினை அளித்துள்ளது.

லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு அந்த அட்டவணையில் உள்ள 7 கட்ட தேர்தல்களில் நடக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையானது 543 ல் இருந்து 544 ஆக மாறி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விளக்கத்தினை தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார். அவர் தெரிவி்த்துள்ளதாவது, லோக்சபாவில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. வன்முறையால் பாதிப்படைந்துள்ள வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், இன்னர் மணிப்பூர் மற்றும் அவுட்டர் மணிப்பூர் என இரண்டு தொகுதிகள் உள்ளன. வன்முறையால் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இதனால் இங்குள்ள இரண்டு தொகுதிகளுக்கு ஏப்.19 மற்றும் ஏப்.26 என இரண்டு கட்டங்களாக தேர்தலானது நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

India Lokshaba Seats


இதில் இன்னர் மணிப்பூர் தொகுதிக்கு முதல் கட்டத்தில்வாக்குப்பதிவானது நடக்கிறது. அவுட்டர் மணிப்பூர் தொகுதிக்கு சில இடங்களுக்கு முதல் கட்டத்திலும், மீதமுள்ள இடங்களுக்கு இரண்டாவது கட்டத்திலும் வாக்குப்பதிவானது நடக்கிறது. இதனால் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையானது 544 ஆக காட்டப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 96.88 கோடிபேர். இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கையானது 49.72 கோடி. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 47.15 கோடி. மூன்றாம் பாலினத்தவர் 48.044 .

முதன்முதலாக வாக்கு அளிக்க உள்ள முதல்முறை வாக்காளர்கள் 1.84கோடி, மாற்றுத்திறனாளிகள் 88 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். வீட்டில் இருந்து வாக்களிக்க உள்ளோரின் எண்ணிக்கையானது 85 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 82 லட்சம் பேர் ஆவர். 100 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களின் எண்ணிக்கையானது 2.18 லட்சம் பேர் ஆவர்.

தேர்தலுக்கான மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 10.50 லட்சம். பயன்படுத்தப்பட உள்ளவாக்கு இயந்திரங்களின் எண்ணிக்கை 55 லட்சம். தேர்தல் பணிக்காக அமர்த்தப்பட உள்ள ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கை 1.50 கோடிபேர்.

தேர்தல் நல்ல முறையில் நடத்தப்பட இதற்காக பணியமர்த்தப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர்களின் மொத்த எண்ணிக்கை 2100 ஆகும்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு