இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை
இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் தொடங்கப்பட்டுள்ளது
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லை பகுதியிலும் புகுந்து அந்த பகுதியில் இருந்த மக்களை தாக்கியது. இதில், பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு படையும் பதிலடி கொடுத்து வருகிறது.
காசா பகுதியில் உள்ள கட்டிடங்களை இலக்காக கொண்டு வான்வழி தாக்குதல்களை நடத்துகிறது. இதுவரை இஸ்ரேல் மக்கள் 900 பேரும், பாலஸ்தீனிய மக்கள் 770 பேரும் கொல்லப்பட்டு உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலுக்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு போர் நிலவரம் குறித்து பேசியுள்ளார். இஸ்ரேலில் 18,000 இந்தியர்கள் உள்ளனர். இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசும், வெளியுறவு துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், "ஆபரேஷன் அஜய்" மூலம் இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளை இந்தியா தொடங்கியுள்ளது. இதுகுறித்து வெளியுறவு மந்திரி ஜெய்சங்கள் எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;
"இஸ்ரேலில் இருந்து இந்தியரகள் நாடு திரும்புவதற்கு வசதியாக ஆபரேஷன் விஜய் தொடங்கப்படுகிறது. அவர்கள் பத்திரமாக இந்தியா திரும்ப சிறப்பு விமானங்கள் மற்றும் பிற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. வெளிநாட்டில் உள்ள நமது நாட்டினரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முழுமையாக அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்." என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இஸ்ரேலில் இருந்து இந்தியா செல்வதற்காக பதிவு செய்துள்ள இந்தியர்கள், நாளை முதல் சிறப்பு விமானத்தில் இந்தியாவுக்கு அனுப்பப்படுவார்கள் என்று இஸ்ரேலில் உள்ள நாட்டின் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தியா திரும்பப் பதிவு செய்த இந்தியர்களுக்கு தூதரகம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது, அவர்கள் நாளை முதல் சிறப்பு விமானத்தில் இந்தியாவுக்கு அனுப்பப்படுவார்கள் என்று இஸ்ரேலில் உள்ள நாட்டின் தூதரகம் மற்றொரு இடுகையில் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் ஆட்சி செய்யும் காசா பகுதி மீது இஸ்ரேல் பாரிய குண்டுவீச்சு மூலம் கொலைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த ஐந்து நாட்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனியப் பகுதிகளைச் சுற்றி இஸ்ரேல் தனது இராணுவப் படைகளைக் குவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu