லடாக்கில் ஹோவிட்சர் ரெஜிமென்ட்டைநிலைநிறுத்திய இந்தியா

லடாக்கில் ஹோவிட்சர் ரெஜிமென்ட்டைநிலைநிறுத்திய இந்தியா
X

50 கிமீ தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஹோவிட்சர்

சீனாவின் அத்துமீறலை எதிர்கொள்ள லடாக்கில் 50 கிமீ தொலைவில் இலக்குகளை தாக்கும் ஹோவிட்சர் ரெஜிமென்ட்டை இந்தியா நிறுவியுள்ளது

பாங்காங் ஏரி பகுதியில் ஏற்பட்ட வன்முறை மோதலைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்தியா மற்றும் சீனா இடையே எல்லைப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் கனரக ஆயுதங்களுடன் விரைந்து தங்கள் படைபலத்தை மேம்படுத்தினர்.

இந்திய இராணுவம் முதல் K9-Vajra ஆட்டோமாடிக் ஹோவிட்சர் ரெஜிமென்ட்டை லடாக் செக்டரில் முன்னோக்கி பகுதிகளில் சீனாவுடன் உண்மையான கட்டுப்பாட்டு கோடு (LAC) யில் நிறுத்தியுள்ளது. இந்த ஆட்டோமாடிக் துப்பாக்கிகள் எதிரி இலக்குகளை சுமார் 50 கி.மீ. வரை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.

" K-9 வஜ்ரா ஆட்டோமாடிக் பீரங்கி துப்பாக்கிகள் அதிக உயரமுள்ள பகுதிகளிலும் வேலை செய்ய முடியும், கள சோதனைகள் மிகவும் வெற்றிகரமாக இருந்தன. நாங்கள் இப்போது ஒரு முழு ரெஜிமென்டையும் சேர்த்துள்ளோம், இது மிகவும் உதவியாக இருக்கும்" என்று ராணுவத் தலைவர் ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே கூறியுள்ளார்.

சீனர்கள் கிழக்கு லடாக் மற்றும் நமது கிழக்கு பகுதியின் வடக்கு வரை கணிசமாக படைகளை நிறுத்தியுள்ளது. இது எங்களுக்கு கவலையாக உள்ளது. எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள இந்தியாவும் படைகளை தயார்நிலையில் வைத்துள்ளோம் என ராணுவத் தலைவர் கூறினார்.

"அவர்களின் அனைத்து அசைவுகளையும் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எங்களுக்கு கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில், உள்கட்டமைப்பு மற்றும் எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். எந்தவொரு நிகழ்வையும் சந்திக்க தயாராக உள்ளோம். "என்று அவர் மேலும் கூறினார்.

இந்த வார தொடக்கத்தில், வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, எல்லைப் பகுதிகளில் சீனா தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான துருப்புக்களையும் ஆயுதங்களையும் குவித்து வருவதாக கூரின்னர்

K-9 வஜ்ரா என்பது தென் கொரியாவில் இருந்து வந்த K9 தண்டரின் உள்நாட்டு பதிப்பாகும். அவை மும்பையைச் சேர்ந்த லார்சன் அண்ட் டூப்ரோவால் தென் கொரிய நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படுகின்றன.

இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனை 3,488 கிமீ நீளமுள்ள உண்மையான கட்டுப்பாட்டு கோட்டை உள்ளடக்கியது. அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத்தின் ஒரு பகுதியாக சீனா உரிமை கோருகிறது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்