இந்தியாவில் தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது, 24 மணி நேரத்தில் 1,00,636 பேருக்கு கொரோனா

இந்தியாவில் தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது, 24 மணி நேரத்தில் 1,00,636 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சத்து 636 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று காலை 7 மணி முதல் இன்று காலை 7 மணிவரை தொற்று பாதித்தவர்களின் நிலைக் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 636 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 89 லட்சத்து 9 ஆயிரத்து 975 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் நாட்டில் 2,427 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,49,186 ஆக உயர்ந்தது.

கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 399 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 71 லட்சத்து 59 ஆயிரத்து 180 ஆக அதிகரித்தது.

கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 14 லட்சத்து ஆயிரத்தி 609 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!