இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 53,256 பேருக்கு கொரோனா : 1,422 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 53,256 பேருக்கு கொரோனா : 1,422 பேர் பலி
X

பைல் படம்

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 53,256 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் மட்டும் 1,422 பேர் இறந்தனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேர கொரோனா நிலவரம் தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 53,256 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,99,35,221-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 7,02,887 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலன் இன்றி 1,422 பேர் உயிரிழந்தனர், இதுவரை கொரோனா நோய்க்கு சிகிச்சை பலன் இன்றி 3,88,135 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதிதாக 78,190 பேர் குணமடைந்து வீடு திரும்புயுள்ளார். இதுவரை சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 2,88,44,199-ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கஞ்சா போதையில் வடமாநில இளைஞர் அராஜகம் – வடமாநில இளைஞர் மீது பொதுமக்கள் ஆத்திரம் - ஈரோட்டில் பரபரப்பு!