சர்வதேச கேன்ஸ் ஃபிலிம் மார்க்கெட்டில் இந்தியா முதல் கவுரவ தேசமாகத் தேர்வு
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர்
பிரான்சில் நடைபெறவுள்ள 75-வது கேன்ஸ் திரைப்படவிழாவின் இடையே நடைபெறும் மார்சே டு பிலிம் எனப்படும் திரைப்பட சந்தையில், அதிகாரபூர்வ 'கவுரவத்திற்குரிய நாடு' அந்தஸ்து இந்தியாவிற்கு வழங்கப்பட்டிருப்பதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று அறிவித்துள்ளார்.
இந்த முடிவு குறித்து விளக்கியுள்ள அமைச்சர், "மார்சே டு பிலிம் திரைப்படசந்தையில், அதிகாரபூர்வ 'கவுரவத்திற்குரிய நாடு'அந்தஸ்து வழங்கப்படுவது இதுவே முதல்முறை என்றும், இனி வரும் ஆண்டுகளிலும் இந்த சிறப்புக் கவனம் தொடர்வதோடு, வருங்காலங்களில் பல்வேறு நாடுகள் இத்தகைய சிறப்பைப் பெறும்" என்றும் தெரிவித்துள்ளார். பிரான்சும். இந்தியாவும் தங்களுக்கு இடையே தூதரக உறவு ஏற்பட்டதன் 75-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதோடு பிரதமரின் பாரீஸ் பயணம் மற்றும் அந்நாட்டு அதிபர் மேக்ரனுடனான அவரது சந்திப்பு, போன்றவற்றுக்கு இடையே இது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இத்தகைய ராஜ்ஜிய பின்னணியில், கேன்ஸ் திரைப்படவிழாவில் மார்சே டு பிலிம் சந்தையில் 'கவுரவத்திற்குரிய நாடு' என இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மார்சே டு பிலிம்ஸ் தொடக்க நாள் இரவில், கவனம் பெறும் நாடாக இந்தியா இடம் பெறுவது உறுதி செய்யப்பட்டிருப்பது நாட்டிற்கு கிடைத்த கவுரவம் என்று திரு தாக்கூர் தெரிவித்துள்ளார். மெஜஸ்டிக் கடற்கரையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் இந்தியா கவனம் பெறுவதோடு, அதன் திரைப்படம், அதன் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் போன்றவையும் கவனம் பெற உள்ளன. இந்த நிகழ்ச்சியில் இந்திய பேண்டு வாத்திய பாடல் குழுவின் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் கிராமிய இசை மற்றும் வாணவேடிக்கைகளும் இடம் பெற உள்ளன. மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு இந்திய மற்றும் பிரெஞ்ச் உணவுகளும் வழங்கப்படுவது மேலும் சிறப்பு சேர்ப்பதாக அமையும்.
இந்த நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பு அம்சமாக ஆர் மாதவன் தயாரித்த திரைப்படமான "ராக்கெட்ரி" கேன்ஸ் திரைப்படவிழாவில் இம்முறை இந்தியாவின் சார்பில், இடம் பெறுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu