இந்தியா-வங்கதேசம் பயணிகள் ரெயில் சேவை இன்று முதல் மீண்டும் இயக்கம்

இந்தியா-வங்கதேசம் பயணிகள் ரெயில் சேவை இன்று முதல் மீண்டும் இயக்கம்
India-Bangladesh train இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான பயணிகள் ரெயில் சேவை 2 ஆண்டுகளுக்கு பின் இன்று மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

India-Bangladesh train Service கொரோனா பரவல் காரணமாக உலகமெங்கும் ரயில், விமான, பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயான பயணிகள் போக்குவரத்து ரெயில் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பின் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான பயணிகள் ரெயில் சேவை இன்று மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இதன்படி, பந்தன் எக்ஸ்பிரஸ் (கொல்கத்தா - குல்னா - கொல்கத்தா) மற்றும் மைத்ரீ எக்ஸ்பிரஸ் (கொல்கத்தா - டாக்கா - கொல்கத்தா) ஆகிய ரெயில்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.

India-Bangladesh train Service வங்கதேசத்தில் இருந்து சுற்றுலா, மருத்துவம் மற்றும் பொருட்களை கொள்முதல் செய்தல் ஆகியவற்றுக்காக பயணிகள் வருகின்றனர் என கிழக்கு ரெயில்வே வர்த்தக உதவி மேலாளர் எச்.என். கங்கோபாத்யாய் கூறியுள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story