சுதந்திர தின விழாவில் நாடு முழுவதிலுமிருந்து 1800 சிறப்பு அழைப்பாளர்கள்
டெல்லி செங்கோட்டை
புதுடெல்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ள 18 வகையான தொழில்களைச் சேர்ந்த கைவினைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
டெல்லி செங்கோட்டையில் இந்த ஆண்டு நடைபெறும் சுதந்திர தின விழாவில் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 1800 சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றும் விழாவிற்கும், இந்த நிகழ்வில் அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரையைக் கேட்பதற்கும் மத்திய அரசு அவர்களை அழைத்துள்ளது.
இந்த ஆண்டு புதுதில்லியில் நடைபெறும் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்க நாடு முழுவதிலுமிருந்து 18 வெவ்வேறு தொழில்களைச் சேர்ந்த 50 கதர் கைவினைஞர்கள் மற்றும் 62 கைவினைஞர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துணைகளுக்கு எம்.எஸ்.எம்.இ அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. ஆகஸ்ட் 15 அன்று புதுடெல்லி செங்கோட்டையில் இந்தியப் பிரதமர் சுதந்திர தினக் கொடியை ஏற்றும் விழாவில் கலந்து கொண்ட பின்னர், அவர்கள் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் நாராயண் ரானேவின் இல்லத்தில் நடைபெறும் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்.
தேசத்தைக் கட்டியெழுப்புவதில் கதர் கைவினைஞர்களின் பங்களிப்புக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் வகையில் இந்தியா முழுவதிலுமிருந்து அவர்கள் வரவழைக்கப்படும் முயற்சியை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ’இல்லந்தோறும் மூவர்ணக் கொடி' என்ற உணர்வுடன் சமூக ஊடகங்களின் காட்சிப் படத்தை மாற்றுமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இல்லந்தோறும் மூவர்ணக் கொடி இயக்கத்தின் உணர்வில், நமது சமூக ஊடகக் கணக்குகளின் காட்சிப் படங்களை மாற்றுவதுடன், இந்த தனித்துவமான முயற்சிக்கு ஆதரவை வழங்குவோம், இது நம் அன்புக்குரிய நாட்டிற்கும், நமக்கும் இடையிலான பிணைப்பை ஆழப்படுத்தும்." என தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu