மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை

மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை
X

பைல் படம்.

மஹாராஷ்டிரா அரசின் மூத்த அமைச்சருடன் நெருங்கிய தொடர்புள்ளவர்களின் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மூத்த அமைச்சருடன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். புனே, மும்பை, நாக்பூர் மற்றும் கோவா உட்பட பல இடங்களில் இந்த சோதனைகள் மற்றும் தேடுதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஜரேந்தேஷ்வர் சர்க்கரை கூட்டுறவு தொழிற்சாலை (SCF) மற்றும் டவுண்டில் உள்ள மற்றொரு சர்க்கரை கூட்டுறவு தொழிற்சாலை. கோவா மற்றும் மும்பை அமைச்சருடன் தொடர்புடைய ரியல் எஸ்டேட் அதிபர்கள் என சோதனை நடைபெற்று வருகிறது.

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் அவரது மனைவி முன்னாள் இயக்குநர்களாக இருந்த இரண்டு நிறுவனங்கள் உட்பட, அவருடன் தொடர்புடைய நிறுவனங்களின் குழு மூலம் ஏலத் தொகை நிதியளிக்கப்பட்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.

கூட்டுறவு வங்கியில் நடந்த முறைகேடுகளுக்காக ஏஜென்சியால் விசாரிக்கப்பட்ட 70-க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளில் துணை முதல்வர் பவார் ஒருவர். புகார்களின் அடிப்படையில், நிறுவனம் 25,000 கோடி மோசடி செய்ததாகக் கூறியுள்ளது.

சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் அசோக் சவானுடன் தொடர்புடைய பில்டர்கள் மீதான சோதனைகளை வருமான வரித்துறை முடித்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story