புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா: கட்சிகளின் பங்கேற்பும் புறக்கணிப்பும்.. பட்டியல் இதோ..

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா: கட்சிகளின் பங்கேற்பும் புறக்கணிப்பும்.. பட்டியல் இதோ..
X

புதிய நாடாளுமன்ற கட்டிடம்.

new Parliament building, new Parliament building opening - புதிய நாடாளுமன்ற கட்டட திறப்புவிழாவில் பங்கேற்கும் மற்றும் புறக்கணிக்கும் கட்சிகளின் பட்டியலைப் பார்ப்போம்.

new Parliament building, new Parliament building opening - புதிய நாடாளுமன்றம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் வரும் ஞாயிறன்று வரலாறு மீண்டும் திரும்பவிருக்கிறது. டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்நாளில் நியாயமான, சமத்துவமான நிர்வாகத்தின் புனித அடையாளமாக விளங்கும் செங்கோலினைப் பிரதமர் பெற்று அதனைப் புதிய நாடாளுமன்றத்தில் நிறுவவிருக்கிறார். இதே செங்கோலினை ஆகஸ்ட் 14 அன்று இரவு பல தலைவர்கள் முன்னிலையில் இந்தியாவின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேரு தமது இல்லத்தில் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

PM Modi will inaugurate the new Parliament Building on May 28 in New Delhi

இந்த நிலையில், காங்கிரஸ், என்சிபி, ஆர்ஜேடி, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்போவதாக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. காங்கிரஸ், ஆம் ஆத்மி, டிஎம்சி உள்ளிட்ட 20 கட்சிகள் தொடக்க விழாவை புறக்கணிக்க உள்ளனர். அதே நேரத்தில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பகுஜன் சமாஜ் கட்சி, பிஜேடி மற்றும் பிற கட்சிகள் நிகழ்ச்சியில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளன. இந்த விழாவை புறக்கணித்த எதிர்கட்சிகள், யார் வருவார்கள் என்று பார்ப்போம்.

new Parliament building inauguration

புறக்கணித்த எதிர்க்கட்சிகளின் பட்டியல்:

- காங்கிரஸ்

- ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி)

- திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி)

- சமாஜ்வாதி கட்சி (எஸ்பி)

- கேரள காங்கிரஸ் (மணி)

- விடுதலை சிறுத்தைகள் கட்சி

- ஜனதா தளம் (ஐக்கிய)

- தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி)

- இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

- தேசிய மாநாடு

- புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி

- மருமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (எம்டிஎம்கே)

- திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக)

- ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி)

- பிஆர்எஸ் இன்று முடிவு எடுக்கவுள்ளது.

PM Modi, congress, bjp, opposition parties, Parliament building

பங்கேற்கும் எதிர்க்கட்சிகளின் பட்டியல்:

- ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா

- பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி)

- பிஜு ஜனதா தளம் (பிஜேடி)

- லோக் ஜனசக்தி கட்சி (எல்ஜேபி)

- இந்திய குடியரசுக் கட்சி (ஆர்பிஐ)

- அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக)

- தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி)

- சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி)

- யுவஜன ஷ்ரமிகா ரைத்து காங்கிரஸ் கட்சி (ஒய்எஸ்ஆர்சிபி)

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?