10 வருடம் முடிந்த ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
![10 வருடம் முடிந்த ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு 10 வருடம் முடிந்த ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு](https://www.nativenews.in/h-upload/2024/04/17/1891788-adar.webp)
உங்கள் ஆதார் அட்டை பத்து வருடங்களுக்கு மேல் பழமையானதாக இருக்கும் பட்சத்தில் அது முடக்கப்படலாம் என்று ஆதார் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உங்கள் ஆதார் அட்டை 10 வருடத்திற்கு முன் வாங்கப்பட்டு அதே நேரத்தில் நீங்கள் அதில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்றால், உங்கள் ஆதார் அட்டை ரத்து செய்யப்படலாம். இந்த நடைமுறை UIDAI (இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம்) மூலம் தொடங்கப்பட்டுள்ளது.
பலர் தங்கள் ஆதார் அட்டைகளை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. காலாவதியான ஆதார் அட்டையை வைத்து பலன் எதுவும் இல்லை. அது எங்கேயும் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே 10 வருட பழைய ஆதார் அட்டையின் விவரங்களை திருத்த கால அவகாசம் ஜூன் 14ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது. தனிப்பட்ட கணக்குகளை பயன்படுத்தி அடுத்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி வரை விவரங்களைத் திருத்தலாம். முன்னதாக கடந்த 10 ஆண்டுகளில் உங்கள் ஆதார் விவரங்களை நீங்கள் புதுப்பிக்கவில்லை என்றால் ஜூன் மாதம்தான் அதற்கான கடைசி வாய்ப்பு . முன்னதாக டிசம்பர் 14 வரை இலவசமாகச் செய்யலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் இந்த அவகாசம் மார்ச் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது இதற்கான அவகாசம் ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஆதார் தொடர்பான மோசடிகளைத் தடுக்க, 10 வருடங்களாக ஆதார் வைத்திருப்பவர்களை, சமீபத்திய தகவலுடன் விவரங்களைப் புதுப்பிக்குமாறு UIDAI வலியுறுத்தி உள்ளது.ஆதார் கார்டு தற்போது நாட்டில் முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. பல சேவைகளுக்கு இந்தியாவில் ஆதார் கார்டு முக்கியம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது.
மத்திய அரசு சேவைகள், மாநில அரசு சேவைகளை பெற ஆதார் கார்டு முக்கியம் ஆகி உள்ளது. இந்த நிலையில்தான் ஒருவேளை ஆதார் அட்டையில் மாற்றங்களை செய்ய மத்திய அரசு இலவச ஆன்லைன் வசதியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. 10 ஆண்டுகளாக ஆதார் கார்டை அப்டேட் செய்யாதவர்கள், விலாசம் மாறியவர்கள், ஆதார் கார்டில் தவறான விவரங்கள் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்
உதாரணமாக உங்களின் பெயர் தவறாக இருந்தால் அல்லது வேறு விவரங்கள் தவறாக இருந்தால் ஆன்லைன் மூலம் அதை எளிதாக மாற்ற முடியும். இதற்கான வசதிகளை ஆதார் அமைப்பு ஏற்படுத்தி கொடுத்து உள்ளது. UIDAI ஏற்படுத்தி கொடுத்துள்ள வசதிகள் மூலம் எளிதாக இந்த விவரங்களை மாற்ற முடியும். மார்ச் 14ம் தேதி வரை இந்த மாற்றங்களை செய்ய கட்டணம் இல்லாமல் இருந்தது. ஆன்லைன் மூலம் எளிதாக செய்ய முடியும். நேரில் ஆதார் மையத்தில் செய்வதற்கு மட்டும் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
myAadhaar பக்கம் மூலம் எளிதாக இவர்கள் விலாசத்தை மாற்றும் வசதி இருந்தது. ஆனால் தற்போது அந்த அவகாசம் நிறைவிற்கு வர உள்ளது. நேற்றோடு இந்த அவகாசம் முடிந்த நிலையில் இனி விலாசத்தை மாற்ற கட்டணம் செலுத்த வேண்டும். இச்சேவையை நேரிடையாக பெற இப்போதும் கட்டணம் உள்ளது. ஆனால் இதுவரை ஆன்லைன் வழியாக இலவசமாக பெற முடிந்தது. . uidai.gov.in அல்லது https://myaadhaar.uidai.gov.in/genricPVC மூலம் ஆதார் எண் அல்லது விர்ச்சுவல் ஐடி அல்லது என்ரோல்மென்ட் ஐடி மூலம் இந்த அட்டையின் விலாசத்தை புதுப்பிக்க முடியும். இதற்கு கட்டணம் இப்போது இல்லை.மை ஆதார் என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை வைத்து லாகின் செய்து, அதிலேயே பணம் செலுத்தாமல் விவரங்களை மாற்ற முடியும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu