விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு! பயோமெட்ரிக் பதிய கால அவகாசம் நீட்டிப்பு
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 வீதம் ஆண்டுகளுக்கு ரூ.6000 வேளாண் இடுபொருட்கள் வாங்கும் வகையில் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு இதுவரை 10 தவணைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது விவசாயிகள் வருகிற ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை காலத்திற்கான 11வது தவணைத் தொகை பெறுவதற்காக தங்கள் ஆதார் விவரங்களை சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்.
ஆதார் எண்ணுடன் செல்போன் எண் இணைத்துள்ள விவசாயிகள் ஆதார் விவரங்களை பிரதம மந்திரி கிசான் இணையதளத்தில் சரி பார்க்கலாம். இ-சேவை மையங்களில் பிரதம மந்திரி கிசான் இணையதளத்தில் விரல் ரேகை பதிவு செய்து விவரங்களை சரிபார்க்கலாம். அதற்கு கட்டணமாக ரூபாய் 15 மட்டுமே செலுத்த வேண்டும்.
இந்த சரிபார்ப்பு வரும் 30 ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மே 22ம் தேதி வரை பதிவு செய்ய மத்திய அரசு கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.
எனவே விவசாயிகள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmkisan.gov.in/ என்ற முகவரியில் சென்றும், அருகிலுள்ள இ-சேவை மையத்திலோ பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu