குஜராத்தில் 7வது முறையாக வெற்றி: மக்கள் சக்திக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி
குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், அந்த மாநில மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
"நன்றி குஜராத். அமோகமான தேர்தல் முடிவுகளைப் பார்த்து நான் மிகுந்த உணர்ச்சிகளில் மூழ்கிவிட்டேன். மக்கள் வளர்ச்சிக்கான அரசியலை ஆசீர்வதித்துள்ளனர், அதே நேரத்தில் இந்த வேகம் இன்னும் அதிக வேகத்தில் தொடர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்கள். குஜராத்தின் ஜனசக்திக்கு நான் தலைவணங்குகிறேன். ," என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
குஜராத்தில் பாஜகவினர் வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்ததோடு, அவர்களின் கடின உழைப்பையும் பாராட்டினார்.
"கடின உழைப்பாளி குஜராத் பாஜக தொண்டர்கள் அனைவருக்கும், நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு சாம்பியன்! நமது கட்சியின் உண்மையான பலமாக இருக்கும் நமது தொண்டர்களின் கடின உழைப்பு இல்லாமல் இந்த வரலாற்று வெற்றி ஒருபோதும் சாத்தியமில்லை" என்று பிரதமர் மோடி கூறினார்.
ஆனால், இமாச்சல பிரதேசத்தில் பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, "பாஜக மீதான பாசத்திற்கும் ஆதரவிற்கும் இமாச்சல பிரதேச மக்களுக்கு நன்றி. மாநிலத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றவும், மக்கள் பிரச்னைகளை வரும் காலங்களில் எழுப்பவும் தொடர்ந்து பாடுபடுவோம்.என்றார்.
ஆறுமணி நிலவரப்படி, குஜராத்தில் பாஜக 150 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, 6 இடங்களில் முன்னிலை வகிக்கிறது
காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆம் ஆத்மி 5 இடங்களை கைப்பற்றியுள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu