நான் மலாலா இல்லை.. காஷ்மீர் ஆர்வலரின் பிரிட்டன் உரை வைரல்

நான் மலாலா இல்லை.. காஷ்மீர் ஆர்வலரின் பிரிட்டன் உரை வைரல்
X

யானா மிர்.

"நான் மலாலா இல்லை, என் நாட்டில் நான் பாதுகாப்பாக இருக்கிறேன்": காஷ்மீர் ஆர்வலரின் பிரிட்டன் உரை வைரலாகிறது.

தாலிபான் தடைக்கு எதிராக குரல் கொடுத்ததால், மலாலா யூசஃப்சாய் 2012-ல் ஸ்வாட் பள்ளத்தாக்கில் தாலிபன் துப்பாக்கி ஏந்திய ஒருவரால் தலையில் சுடப்பட்டார்.

தாக்குதலுக்குப் பிறகு, மலாலா ஐக்கிய இராஜ்யத்திற்குச் சென்று, பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 2014 இல் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற இளைய நபர் என்ற பெருமையைப் பெற்றார். அப்போது மலாலாவுக்கு வயது 17.

பிரிட்டிஷ் பாராளுமன்ற கட்டிடத்தில் பேசிய காஷ்மீர் ஆர்வலர் யானா மிர், "நான் மலாலா யூசஃப்சாய் கிடையாது. என் தாய்நாட்டை விட்டு ஓட வேண்டிய அவசியம் எனக்கு ஒருபோதும் வராது" என்று அழுத்தமாக கூறினார்.

ஜம்மு காஷ்மீர் இளைஞர் சங்கத்துடன் தொடர்புடைய யானா மிர், பிரிட்டிஷ் பாராளுமன்ற கட்டிடத்தில் ஜம்மு காஷ்மீர் ஆய்வு மையம் (JKSC) நடத்திய "சங்கல்ப் திவாஸ்" நிகழ்வில் உரையாற்றினார்.

அப்போது நான் மலாலா யூசஃப்சாய் கிடையாது. என் தாய்நாட்டை விட்டு ஓட வேண்டிய அவசியம் எனக்கு ஒருபோதும் வராது"இந்தியாவில், எனது வீடான காஷ்மீரில் நான் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறேன்.

மலாலா யூசஃப்சாய், நீங்கள் எனது முன்னேறும் தாய்நாட்டை 'ஒடுக்கப்பட்டது' என்று அவதூறு செய்வதை நான் கண்டிக்கிறேன். இந்தியக் காஷ்மீருக்கு ஒருமுறை கூட வராத, சமூக ஊடகங்களிலும் வெளிநாட்டு ஊடகங்களிலும் 'துணைக் கருவி உறுப்பினர்கள்' போல செயல்பட்டு, அங்கிருந்து 'ஒடுக்குமுறைக்' கதைகளைப் புனைபவர்கள் அனைவரையும் நான் எதிர்க்கிறேன். என்று யானா மிர் கூறினார்.

மேலும்மதத்தின் அடிப்படையில் இந்தியர்களைப் பிரிக்க முயற்சிப்பதை நிறுத்துங்கள். உங்களை எங்களைப் பிரிக்க அனுமதிக்க மாட்டோம். இங்கிலாந்திலும் பாகிஸ்தானிலும் வசிக்கும் குற்றவாளிகள், என் நாட்டை இழிவுபடுத்துவதை நிறுத்துவார்கள் என்று நம்புகிறேன் என்று யானா மிர் தனது உரையில் வேண்டுகோளும் விடுத்தார்.

இவர் காஷ்மீரின் முதல் பெண் வ்லாகர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர். இவர் ஒரு பத்திரிகையாளராகவும் உள்ளார். தான், நோபல் பரிசு பெற்ற மலாலா யூசஃப்சாய்க்கு நேரெதிர் என்று இங்குதான் யானா மிர் வலியுறுத்தினார்.

யானா மிரின் உரையின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. தனது உரையால் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்