போதை பார்ட்டியில் கலந்துகொண்ட பிரபல நடிகை கைது

ஐதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி, நள்ளிரவு பார்ட்டி நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துச்சாம்.
ஐதராபாத் போலீசார், நேத்திக்கு -ஞாயிறன்று அதிகாலை அங்கு அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அப்போது, 90 இளைஞர்கள், 38 இளம் பெண்கள் மற்றும் பப் ஊழியர்கள் உள்பட சுமார் 150 பேர் சிக்கினர். அனைவரும் தொழிலதிபர்கள் சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் அதிக அளவில் போதைப் பொருள் பயன்படுத்தி இருந்தனர்.
இதில், நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபுவின் மகளும், நடிகையுமான நிஹாரிகாவும் ஒருவர். இவர் தமிழில், 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்', 'சை ரா நரசிம்ம ரெட்டி' ஆகிய படங்களில் நடிச்சிருக்கார்.
விசாரணைக்கு பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கொகைன் உள்ளிட்ட போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் விடுவித்துள்ளனர்.
அவர்களிடம் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பிறகு அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போதைப் பொருள் வழக்கில் யாரும் தப்ப முடியாது என்று போலீசார் (இப்போதைக்கு) சொல்லி இருக்காய்ங்க
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu