ஹூப்பள்ளி -ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் ராமநாதபுரம் வரை மட்டுமே இயங்கும்

ஹூப்பள்ளி -ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் ராமநாதபுரம் வரை மட்டுமே இயங்கும்
ஹூப்பள்ளி -ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ரயில் எண்.07355/07356 ஹுப்பள்ளி-ராமேஸ்வரம்-ஹுப்பள்ளி வாராந்திர சிறப்பு ரயில்கள் சைவை நீட்டிப்பு செய்யப்பட்டு ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் எண்.07355 ஹூப்பள்ளி- ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் 06.07.2024 முதல் 28.12.2024 வரை சனிக்கிழமைகளில் 06.30 மணிக்கு ஹூப்பள்ளியில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் 06.15 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.

ரயில் எண்.07356 ராமேஸ்வரம் – ஹூப்பள்ளி வாராந்திர சிறப்பு ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் 07.07.2024 முதல் 29.12.2024 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் 21.00 மணிக்குப் புறப்பட்டு திங்கள்கிழமைகளில் 19.25 மணிக்கு ஹுப்பள்ளியை சென்றடையும்.

பெட்டிகள்: ஏசி 2-அடுக்கு, ஏசி 3-அடுக்கு, ஏசி 3-அடுக்கு எகானமி, ஸ்லீப்பர் வகுப்பு & பொது இரண்டாம் வகுப்பு.

நிறுத்தங்கள்: ஹாவேரி, ராணிபென்னூர். ஹரிஹர், தாவணகெரே, சிக்ஜாஜூர். பிரூர், அரசிகெரே. தும்கூர். பானஸ்வாடி, ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல் கரூர். திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை. காரைக்குடி, மானாமதுரை மற்றும் ராமநாதபுரம்.

சேலம் கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களின் நேரங்கள்: ரயில் எண்.07355 ஹூப்பள்ளி-ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில்: (சனிக்கிழமைகளில்) சேலம் 19.45/19.55 மணி: நாமக்கல்-20.44/20.45 மணி; கரூர்- 21.58/22.00 மணி.

ரயில் எண்.07356 ராமேஸ்வரம்-ஹூப்பள்ளி வாராந்திர சிறப்பு ரயில்:(திங்கட்கிழமைகளில்) கரூர்-03.48/03.50 மணி: நாமக்கல்-04.19/04.20 மணி: சேலம்-05.40 105.50 மணி.

மறு அறிவுரை வரும் வரை பாம்பன் ரயில் பாலம் வழியாக ரயில்களின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதால், ஹூப்பள்ளி-ராமேஸ்வரம்-ஹூப்பள்ளி வாராந்திர சிறப்பு ரயில்கள் ராமநாதபுரம்-ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், ஹூப்பள்ளி-ராமநாதபுரம்-ஹூப்பள்ளி இடையே மட்டுமே ரயில்கள் இயக்கப்படுகின்றன. இத் தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story