Vote என்ற ஆங்கில சொல் ஓட்டு என தமிழ் மக்களால் உச்சரிக்கப்படுவது எப்படி?
பாபா சாகேப் அம்பேத்கர்.
பதினெட்டாவது மக்களவையை அமைப்பதற்கான நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதியான நாளை தொடங்கி ஜூன் மாதம் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட தேர்தல் தேதியான ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள 39 தொகுதிகளிலும் புதுச்சேரியிலும் மற்றும் வட மாநிலங்களில் சில தொகுதிகளிலும் என சேர்த்து மொத்தம் 107 நாடாளுமன்ற தொகுதிகளில் நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்கு பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
நாளை காலை வாக்கு பதிவு திட்டமிட்டபடி தொடங்கி விடும். தமிழகத்தை பொறுத்த வரை 6 கோடியே 23 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காகவும் தங்கள் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்காகவும் வாக்களிக்க உள்ளனர். தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 950 வேட்பார்கள் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக வாக்குப்பதிவு என்பதை நாம் ஓட்டுப்பதிவு என்றும் சொல்கிறோம். வாக்குப்பதிவு என்பது தூய தமிழ் சொல். அதே நேரத்தில் ஓட்டு என்ற வார்த்தையானது Vote என்ற ஆங்கில சொல்லாகும். நாம் பேசும் தமிழ் மொழியில் பல சொற்கள் ஆங்கிலத்துடன் கலந்திருப்பதால் ஓட்டு என்ற சொல்லை சாதாரண பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை அனைவரின் வாயாலும் உச்சரிக்கப்படும் வார்த்தையாக உள்ளது. பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வாக்குப்பதிவு என்று சொல்வதை விட ஓட்டு பதிவு, ஓட்டு என்று தான் அதிகம் விளம்பரப்படுத்தப்படுகிறது.
Vote என்றஆங்கில சொல் எப்படி தமிழ் மக்களின் மனதில் நிலை கொண்டது என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது இன்றயை கால கட்டத்தில் முக்கியமான ஒன்றாகும். ஓட்டு vote என்ற சொல் ஆங்கில சொல்லாகும். vote என்ற ஆங்கில வார்த்தையின் விரிவாக்கம் Voice of Taxpayers everywhere என்பதாகும். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் வரி செலுத்துவோர் மட்டுமே ஓட்டு போடுவதற்கு தகுதி பெற்றவர்களாக சட்டம் இருந்தது.
அந்த சட்டத்தை மாற்றி குறிப்பிட்ட வயது வந்த அனைவருக்கும் அவர்கள் படித்தவர்களாக இருந்தாலும் சரி பாமரர்களாக இருந்தாலும் சரி அனைவருக்கும் ஓட்டு உரிமை வழங்க வேண்டும் என்று சட்டத்தை மாற்றி அமைத்தவர் பாபாசாகேப் அம்பேத்கர். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் தந்தை எனப் போற்றப்படும் அவர்தான் நாட்டில் அனைத்து தரப்பினருக்கும் வாக்குரிமையை பெற்று தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்று அங்கு அரசியல் சட்டத்தை திருத்தம் செய்து இந்த உரிமையை வழங்கவில்லை என்றால் இன்னும் வரி செலுத்துவோர், படித்தவர்கள் வசதி படைத்தவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்ற நிலைமை தொடர்ந்து இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அன்று அவர் பெற்றுத்தந்த உரிமை தான் இன்று நாடு முழுவதும் தேர்தல் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆதலால் வாக்குப்பதிவு தினமான நாளை அனைவரும் இதை தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu