மதுபான நிறுவனத்தின் பங்குச் சந்தை அறிமுக விழாவில் இந்து பண்டிட்: இணையத்தில் வைரல்
பங்குச் சந்தையில் பட்டியலிடுதல் என்பது ஒரு நிறுவனத்தின் பங்குகளை அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்பட்டு, இந்திய தேசிய பங்குச் சந்தையில் (NSE) வர்த்தகத்தைத் தொடங்கும் நிகழ்வைக் குறிக்கிறது. பிரபல மதுபான நிறுவனமான அல்லைட் பிளெண்டர்கள் டிஸ்டில்லர்ஸ் தனது பங்குகளை இன்று (செவ்வாய் கிழமை) அறிமுகப்படுத்தி பட்டியிடப்பட்டது.
இந் நிறுவனத்தின் பட்டியலிடுதல் விழாவில் இந்த பண்டிட்டை மேடைக்கு அழைத்து வந்து, அவர் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி பங்குச் சந்தையில் அறிமுகமானது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. இந்த புகைப்படத்திற்கு கேலி செய்து சிலர் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த விமர்சனத்திற்கு காரணம் ஒரு மதுபான நிறுவனத்தின் பட்டியல் விழாவிற்கு இந்து பண்டிட்டை அழைத்து வந்தது குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
அல்லைட் பிளெண்டர்கள் மற்றும் டிஸ்டில்லர் நிறுவனத்தின் பங்குகள் 14 சதவீத பிரீமியம் விலை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. பிஎஸ்இ சந்தையில் அல்லைட் பிளெண்டர்ஸ் நிறுவனத்தின் பங்கு இன்று பட்டியலிடப்பட்டது. இதில் பங்கின் விலை 13.20 சதவிகிதம் உயர்ந்து ரூ.318.10 என்ற விலையில் வர்த்தகத்தை தொடங்கியது.
ஐபிஓ சமீபத்தில் வெளியிட்ட அல்லைட் பிளெண்டர்கள் மற்றும் டிஸ்டில்லர் நிறுவனத்தின் பங்குகள் 13 முதல் 20 சதவீதம் வரை பிரீமியம் விலையில் பட்டியலிடப்படும் என பங்குச்சந்தை நிபுணர்கள் கணித்தனர். இந்நிலையில் 13 சதவீத பிரீமியம் விலையில் பட்டியலிடப்பட்டுள்ளன. அதாவது ஒரு பங்கின் விலை ரூ.315 முதல் ரூ.333 வரை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த ஐபிஓ வெளியிடு மூலமாக அல்லைட் பிளெண்டர் நிறுவனம் ரூ.1,500 கோடி நிதி திரட்டியுள்ளது. இதில் ரூ.1,000 கோடி புதிய பங்குகளும், ரூ.500 கோடி புரோமோட்டார்கள் வசம் இருந்த பங்குகளும் ஆஃபர் பார் சேல்ஸ் முறையிலும் விற்பனை செய்யப்பட்டன.
மேலும் இந்த ஐபிஓவில் வெளியிடப்பட்ட பங்குகள் க்ரே மார்க்கெட்டில் 17 சதவிகித பிரீமியம் விலையில் வர்த்தகமானதால், பங்குச்சந்தை பட்டியலின் போது அதை விட அதிக விலையில் வர்த்தகத்தை தொடங்கும் என முதலீட்டாளர்களும், சந்தை நிபுணர்களும் கருத்து தெரிவித்திருந்தனர்.
ஜூன் 24ம் தேதி அல்லைட் பிளெண்டர்ஸ் நிறுவனம் ஆங்கர் முதலீடு மூலமாக ரூ. 499.1 கோடியை திரட்டியது. இதில் சொசைட்டி ஜெனரல், கோல்ட்மேன் சாக்ஸ், ட்ரூ கேபிடல், பிஎன்பி பரிபாஸ், 360 ஒன் ஸ்பெஷல் ஆப்பர்சூனிட்டி ஃபண்ட், எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ஜூபிடர் இந்தியா ஆகியவை முதலீடு செய்துள்ளன.
இந்த ஐபிஓவில் அல்லைட் பிளெண்டர்ஸ் நிறுவனம் 3.93 கோடி பங்குகளை வெளியிட்டது. ஆனால் இந்த ஐபிஓவில் அதிக ஆர்வம் கொண்ட முதலீட்டாளர்கள் 92.71 கோடி அளவில் விண்ணப்பித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu