இடைக்கால மத்திய பட்ஜெட் 2024-25-ன் சிறப்பம்சங்கள்

இடைக்கால மத்திய பட்ஜெட் 2024-25-ன் சிறப்பம்சங்கள்
X
இடைக்கால மத்திய பட்ஜெட் 2024-25-ன் சிறப்பம்சங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

அனைவரையும் உள்ளடக்கிய அனைவரின் வளர்ச்சி மற்றும் அனைவரின் நம்பிக்கை என்ற தாரக மந்திரத்துடன், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான அனைவரது முயற்சியுடன் கூடிய அணுகுமுறையுடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறி 2024-25-ம் நிதியாண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இந்த இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:

சமூக நீதி

ஏழைகள், மகளிர், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய நான்கு முக்கியமான வகுப்பினரை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பிரதமர் கவனம் செலுத்தி வருகிறார்.

ஏழைகள் நலனே நாட்டின் நலன்

கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு விதமான வறுமை நிலைகளில் உள்ள 25 கோடி மக்களுக்கு மத்திய அரசு உதவியுள்ளது.

பிரதமரின் ஜன்-தன் வங்கிக் கணக்கில் நேரடி பணப்பரிமாற்றத் திட்டத்தின் மூலம் வரவு வைக்கப்பட்ட 34 லட்சம் கோடி ரூபாயில் அரசுக்கு 2.7 லட்சம் கோடி ரூபாய் வரை சேமிப்பு கிடைத்துள்ளது.

பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் மூலம் 78 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. அதில் 2.3 லட்சம் சாலையோர வியாபாரிகள் 3-வது முறையாக கடனுதவி பெற்றுள்ளனர்.

பிரதமரின் ஜன்மன் திட்டத்தின் கீழ், குறிப்பாக அதிகம் பாதிக்கக்கூடிய பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

18 வகையான கைவினை கலை மற்றும் கைவினைப் பொருட்களுக்கான வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில் பிரதமரின் விஷ்வ கர்மா திட்டம் வகை செய்கிறது.

விவசாயிகள் நலன்

பிரதமரின் வேளாண் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ், 11.8 கோடி விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரின் பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ், 4 கோடி விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

மின்னணு தேசிய வேளாண் சந்தை 1361 மண்டிகளை ஒருங்கிணைத்துள்ளதுடன், 1.8 கோடி விவசாயிகளுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தக சேவைகளை வழங்கியுள்ளது.

பெண் சக்திக்கான உத்வேகம்

பெண் தொழில் முனைவோருக்கு 30 கோடி கடன்கள் முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன

உயர்கல்வியில் சேர்ந்துள்ள மகளிரின் எண்ணிக்கை 28 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ஸ்டெம் (stem) பாடத்திட்டத்தில் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) உலகிலேயே மிக அதிகளவாக 43 சதவீத மகளிர் சேர்ந்துள்ளனர்.

பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், 70 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகள் கிராமப்புற பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் (கிராமப்புறம்)

கோவிட் தொற்று பாதிப்பின் சவால்கள் இருந்தபோதிலும், பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், 3 கோடி வீடுகள் கட்டுவதற்கான இலக்கு விரைவில் எட்டப்படும்.

மேலும் 2 கோடி வீடுகள் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேற்கூரைகளில் சூரியசக்தி மின்உற்பத்தி மற்றும் இலவச மின்சாரம்

வீடுகளின் மேற்கூரைகளில் அமைக்கப்படும் சூரிய சக்தி தகடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 300 அலகுகள் மாதந்தோறும் ஒரு கோடி இல்லங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

இதன் மூலம் ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுதோறும் 15,000 ரூபாய் முதல் 18,000 ரூபாய் வரை சேமிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுஷ்மான் பாரத்

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், வழங்கப்பட்டு வரும் சுகாதாரா சேவைகள் அனைத்து ஆஷா பணியாளர்கள். அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.

விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல்

பிரதமரின் மீன் வளர்ப்புத் திட்டத்தின் கீழ், 38 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளதுடன், 10 லட்சம் வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் குறு உணவுப் பதப்படுத்துதல் நிறுவன கட்டமைப்புத்திட்டத்தின் மூலம் 2.4 லட்சம் சுய உதவிக் குழுக்கள் மற்றும் 60 ஆயிரம் தனி நபர்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுப்படிப்புகளின் வளர்ச்சியை ஊக்குவித்தல். வேலைவாய்ப்பு மற்றும் மேம்பாடு

ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுடன் 50 ஆண்டு கால வட்டியில்லா கடனுதவி வழங்கப்படுவதன் மூலம் நீண்ட கால முதலீடு மற்றும் மறுமுதலீடு தொடர்பான நடவடிக்கைளில் நீண்ட கால மற்றும் குறைந்த அல்லது வட்டியில்லா கடனுதவிகள்

பாதுகாப்பு துறையில் தற்சார்பு நிலையை எட்டும் வகையில், தொழில்நுட்ப பயன்பாடுகளை வலுப்படுத்துவதற்கான புதியத் திட்டம் தொடங்கப்படும்.

உள்கட்டமைப்பு

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான மூலதன செலவுகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கைகள் 11.1 சதவீதம் வரை உயர்ந்து 11 லட்சத்து 11 ஆயிரத்து 111 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதுடன், உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 3.4 சதவீதமாக உயரும்.

ரயில்வே

பிரதமரின் விரைவுச்சக்தி பெருந்திட்டத்தின் கீழ், குறைந்த செலவில் சரக்குப் போக்குவரத்துக்கான மேம்படுத்தப்பட்ட வசதிகளை ஏற்படுத்தும் வகையில் 3 மிகப்பெரிய பொருளாதார ரயில் வழித்தடங்கள் அமைப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

எரிசக்தி, கனிம வளம் மற்றும் சிமெண்ட் ஆகியவற்றுக்கான ரயில் வழித்தடங்கள்

துறைமுகங்களை இணைக்கும் வகையிலான ரயில் வழித்தடங்கள்

அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட பகுதிகளுக்கான ரயில் வழித்தடங்கள்

40 ஆயிரம் சாதாரண வகை ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் தரத்திலான ரயில் பெட்டிகளாக மாற்றப்படும்.

விமானப்போக்குவரத்துத் துறை

நாட்டில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை 149-ஆக அதிகரிக்கப்பட்டு இரு மடங்கு உயர்த்தப்படும்.

புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள 517 விமான வழித்தடங்கள் மூலம் 1.3 கோடி விமானப் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய விமானங்களை கொள்முதல் செய்வதற்கான ஆணைகளை இந்திய விமானம் போக்குவரத்து அமைச்சகம் வழங்கியுள்ளது.

பசுமை எரிசக்தி

நிலக்கரியில் இருந்து எரிவாயு மற்றும் திரவ எரிபொருள் உற்பத்திக்கான திறன் வரும் 2030-ம் ஆண்டுக்குள் 100 மெட்ரிக் டன் அளவுக்கு மேம்படுத்தப்படும்.

வீட்டு உபயோகத்திற்கான குழாய் மூலம் வழங்கப்படும் இயற்கை எரிவாயு மற்றும் போக்குவரத்திற்கான அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவுடன் உயிரி எரிவாயுவை கலப்பதற்கான கட்டாய நடைமுறைகள் படிப்படியாக அமல்படுத்தப்படும்

சுற்றுலாத்துறை

முக்கிய சுற்றுலா தலங்களில் விரிவான மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் மாநிலங்களை ஊக்குவிப்பது உள்ளிட்ட அதனை சர்வதேச தரத்தில் சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

தரமான வசதிகள் மற்றும் சேவைகளின் அடிப்படையில், சுற்றுலா மையங்களை தரவரிசைப்படுத்துவதற்கான நடைமுறைகள் வகுக்கப்படும்.

சுற்றுலாத்துறை மேம்படுத்துவதற்கான மாநில அரசு நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில், நீண்ட கால வட்டியில்லா கடன்கள் வழங்கப்படும்.

முதலீடுகள்

2014-ம் ஆண்டில் இருந்து 2023-ம் ஆண்டு வரையிலான காலத்தில் அந்நிய நேரடி முதலீடாக 596 பில்லியன் அமெரிக்கன் டாலர்கள் பெறப்பட்டுள்ளது. இது 2005-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலத்தில் பெறப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டை காட்டிலும் இரு மடங்கு அதிகமாகும்.

மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான மறு சீரமைப்புத் திட்டங்கள்

மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் வளர்ச்சிக்கான முக்கிய சீரமைப்புத் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், 75 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான நிதி ஆதாரத்திற்கான 50 ஆண்டுகால வட்டியில்லா கடன் தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீடுக்ள 2023-24

கடன்கள் தவிர திருத்தியமைக்கப்பட்ட மொத்த வருவாய் மதிப்பீடு, 27.56 லட்சம் கோடியாக உள்ளது. அதில் 23.24 லட்சம் கோடி ரூபாய் வரி வருவாய் ஆகும்.

திருத்தியமைக்கப்பட்ட மொத்த செலவினத் தொகை 44.90 லட்சம் கோடி ரூபாயாகும்.

வருவாயின வரவுகள் 30.03 லட்சம் கோடி ரூபாய் அளிவிற்கு பட்ஜெட் மதிப்பீட்டைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், நாட்டின் பொருளாதாரம் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் உத்வேகம் பெற்றுள்ளதை பிரதிப்பலிக்கிறது.

2023-24-ம் நிதியாண்டுக்கான திருத்தியமைக்கப்பட்ட நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.8 சதவீதமாக உள்ளது.

பட்ஜெட் மதிப்பீடுகள் 2024-25

கடன்கள் தவிர மொத்த வருவாய் மற்றும் மொத்த செலவினத்தொகை முறையே 30.80 லட்சம் கோடி மற்றும் 47.67 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வரிவருவாய் 26.02 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலங்களின் முதலீட்டு செலவினங்களுக்கான 50 ஆண்டு கால வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் 1.3 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதி ஒதுக்கீட்டுடன் நடப்பாண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் .

2024-25-ம் நிதியாண்டுக்கான நிதிப் பற்றாகுறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடப்பட்டுள்ளது.

2024-25-ம் நிதியாண்டில் காலவரையறையுடன் கூடிய பங்குசந்தைகள் மூலம் பெறப்படும் மொத்த மற்றும் நிகர கடன்தொகை முறையை 14.13 மற்றும் 11.75 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

நேரடி வரிகள்

நேரடி வரிவிதிப்பு விகிதங்கள் எவ்வித மாற்றமுமின்றி அதே வரி விகிதங்களாக தொடரும் என்று நிதியமைச்சர் முன்மொழிந்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் நேரடி வரிவசூல் முன்பணம் மும்மடங்காகவும் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 2.4 மடங்காகவும் அதிகரித்துள்ளது.

வரிசெலுத்துவோருக்கு அளிக்கப்படும் சேவைகளை மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

2009-10 ம் நிதியாண்டு வரையிலான காலத்தில் 25 ஆயிரம் ரூபாய் அளவிலான நேரடி வரி நிலுவைத் தொகைக்கான கோரிக்கைகள் விலக்கிக்கொள்ளப்படும்.

2010-11-ம் நிதியாண்டு முதல் 2014-15-ம் நிதியாண்டு வரையிலான காலத்தில் 10 ஆயிரம் ரூபாய் அளவிலான நேரடி வரி நிலுவைத் தொகைக்கான கோரிக்கைகள் விலக்கிக்கொள்ளப்படும்.

இதன் மூலம் ஒரு கோடி எண்ணிக்கையிலான வரிசெலுத்துவோர் பயனடைவர்.

புத்தொழில் நிறுவனங்களுக்கான வரிப் பலன்கள், தங்கபத்திரம் மீதான சொத்து உருவாக்க நிதி அல்லது ஓய்வூதிய நிதி மீதான முதலீடுகள் 2025-ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நிதி சார் சேவைகள் மையத்தின் ஒரு சில அலகுகள் மூலம் மேற்கொள்ளப்படும் நிதிசார் சேவைகளுக்கான வரி விலக்கு 2025-ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை ஓராண்டு காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மறைமுக வரிகள்

முறைமுக வரிகள் மற்றும் இறக்கும் தீர்வைகளுக்கான விகிதங்களில் எவ்வித மாற்றமின்றி தொடரும் என்று நிதியமைச்சர் முன்மொழிந்துள்ளார்.

நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறையின் அமலாக்கம் மறைமுக வரிவிதிப்பின் கட்டமைப்பை ஒருங்கிணைத்துள்ளது.

மாதாந்திர சராசரி மொத்த ஜிஎஸ்டி வரி வருவாய் இரண்டு மடங்காக உயர்ந்து நடப்பாண்டில் 1.66 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது

ஜிஎஸ்டி வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையின் அமலாக்கத்திற்கு பிறகு மாநிலங்களின் ஜிஎஸ்டி வரி வருவாய் (மாநிலங்களுக்கு விடுவிக்கப்படும் இழப்பீட்டுத் தொகை உட்பட) 1.22 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலாக்கத்திற்கு முந்தைய காலத்தில் (2012-13 முதல் 2015-16 வரை) 0.72 லட்சம் கோடியாக இருந்தது.

94 சதவீத தொழில்துறை நிறுவனங்களின் தலைவர்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையின் அமலாக்கம் குறித்து சாதகமான எண்ணங்களை கொண்டுள்ளனர்.

விநியோக சங்கிலியை மேம்படுத்தும் வகையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமைந்துள்ளது.

வர்த்தகம் மற்றும் தொழில்துறையினரின் சுமைகளை குறைக்கும் வகையில், ஜிஎஸ்டி இணக்க நடைமுறைகள் குறைக்கப்பட்டுள்ளன.

குறைவான சரக்குப் போக்குவரத்து கட்டணம் மற்றும் வரிகள் சரக்கு மற்றும் சேவைகளுக்கான விலைகள் குறைய உதவியதுடன், நுகர்வோருக்கும் பயனளிப்பதாக அமைந்துள்ளது.

சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் வரி சீர்திருத்தத்திற்கான முயற்சிகள்

2013-14-ம் நிதியாண்டில் 2.2 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரியில்லை என்ற நிலையில் இருந்து தற்போது 7 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சில்லறை வர்த்தகத்திற்கான அனுமானத்தின் அடிப்படையில் செலுத்தப்படும் வருமான உச்சவரம்பு 2 கோடி ரூபாயிலிருந்து 3 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொழில்முறை சார்ந்த வருமானத்திற்கு அனுமானத்தின் அடிப்படையிலான உச்சவரம்பு 50 லட்சம் ரூபாயிலிருந்து 75 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள உள்நாட்டு நிறுவனங்களுக்கான வருமான வரி விகிதம் 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

புதிதாக ஏற்படுத்தப்படும் உற்பத்தி நிறுவனங்களுக்கான வருமான வரி விகிதம் 15 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வரிசெலுத்துவோரின் சேவைகளின் சாதனைகள்

வருமான வரி அறிக்கை மீதான மதிப்பீட்டு காலம் 2013-14ம் நிதியாண்டில் சராசரியாக 93 நாட்களாக இருந்த நிலையில் தற்போது 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

வரி மதிப்பீடுகளில் சிறந்த நடைமுறைகளை அறிமுகப்படுத்தும் வகையில், நேரடி மதிப்பீடு மற்றும் மேல்முறையீட்டு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

வருமான வரி அறிக்கைக்கான படிவங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், 26AS படிவத்தின் புதிய வடிவம் மற்றும் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்வதற்கான முன்கூட்டி நிரப்பப்பட்ட, எளிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள்.

இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகள் குறைந்த காலத்தில் விடுவிப்பதற்கு ஏதுவாக சுங்கத்துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள்.

உள்நாட்டு கொள்கலன் நிலையங்களில் சரக்குகளை விடுவிப்பதற்கான கால அவகாசம் 71 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது (47 சதவீதம்)

விமான சரக்கக வளாகங்களில் சரக்குகளை விடுவிப்பதற்கான கால அவகாசம் 44 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது (28 சதவீதம்)

துறைமுகங்களில் சரக்குகளை விடுவிப்பதற்கான கால அவகாசம் 85 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது( 27 சதவீதம்)

பொருளாதாரதம் -தற்போதையை மற்றும் எதிர்கால நிலை

2015-ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார செயல்பாடுகள் சீரமைக்கப்பட்டு, சரியான நிர்வாக நடைமுறைகளை அமல்படுத்தவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருந்தது. இந்த தருணத்தில்; முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள்,

மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளை கட்டமைப்பதற்கான ஆதரவு அளிப்பது

மக்களுக்கு நம்பிக்கை அளிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

“தேசமே முதலில்” என்ற வலுவான நம்பிக்கையுடன் அரசு வெற்றிப்பெற்றுள்ளது

2014-ம் ஆண்டு வரை இருந்த நிலை மற்றும் தற்போது இருந்த நிலை குறித்து தெளிவாக காணமுடியும்- நிதியமைச்சர்

நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்