தில்லி-டேராடூன் பொருளாதார வழித்தட திட்டத்தின் சிறப்புகள்

தில்லி-டேராடூன் பொருளாதார வழித்தட திட்டத்தின் சிறப்புகள்
X
தில்லி-டேராடூன் வழித்தடம்: ஆசியாவிலேயே மிகப்பெரிய உயர்மட்ட பாதையாக இது இருக்கும். 6 மணிநேர பயண நேரத்தை இது 2.5 மணி நேரமாகக் குறைக்கும்.

டேராடூனில் ரூ.18,000 கோடி மதிப்பிலான பல வகை திட்டங்களை டிசம்பர் 4 அன்று பிரதமர் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுகிறார். மிகவும் தொலைதூரத்தில் பகுதிகளுக்குப் போக்குவரத்துத் தொடர்பை அதிகப்படுத்தவும் எளிதாகவும் விரைவாகவும் சென்றடைய பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் இந்த திட்டங்கள் அமைந்துள்ளன.

தில்லி-டேராடூன் பொருளாதார வழித்தடம்

தில்லியிலிருந்து டேராடூனுக்கு 6 மணிநேர பயண நேரத்தை இது குறிப்பிடத்தக்க வகையில் 2.5 மணி நேரமாகக் குறைக்கும். வன விலங்குகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தாத வகையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய உயர்மட்ட பாதையாக இது இருக்கும்.

சார்தாம் உள்ளிட்ட பகுதிகளுக்குத் தடையில்லா போக்குவரத்தை அளிப்பதாக சாலைத் திட்டங்கள் தொடங்கப்படுவது சுற்றுலாத் துறையை ஊக்கப்படுத்தும்

அடிக்கடி மண்சரிவு ஏற்படும் பகுதியான லம்பாகட் மண்சரிவை கட்டுப்படுத்தும் திட்டம் பயணத்தை சுமூகமாகவும், பாதுகாப்பாகவும் மாற்றும்

Tags

Next Story