/* */

ஜார்கண்ட் இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் போட்டி

ஜார்கண்ட் மாநில சட்டசபைக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் போட்டியிடுகிறார்.

HIGHLIGHTS

ஜார்கண்ட் இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் போட்டி
X

தேர்தல் பிரச்சாரத்தில் கல்பனா சோரன்.

ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி கல்பனா சோரன் அம்மாநிலத்தில் நடக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் மிகப் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டது. அங்கு ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருக்கிறது.

அங்கு அதுவரை முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் மீது சுரங்க முறைகேடு புகார் எழுந்த நிலையில், அந்த வழக்கை அமலாக்கத் துறை விசாரித்தது.இது தொடர்பான விசாரணைக்கு அமலாக்கத் துறை 10 முறை அவருக்குச் சம்மன் அனுப்பியது. இருப்பினும், அவர் ஒரே ஒரு முறை மட்டுமே விசாரணைக்கு நேரில் ஆஜரானார். அதன் பிறகு அவர் எந்தவொரு விசாரணைக்கும் ஆஜராகவில்லை.

இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் அமலாக்கத் துறையினர் சோதனையிட்டனர். சுமார் 7 மணி நேரச் சோதனைக்குப் பிறகு ஹேமந்த் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். அப்போதே அவரது மனைவி கல்பனா சோரன் முதல்வராகப் பதவியேற்பார் எனக் கூறப்பட்டது. இருப்பினும், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சம்பாய் சோரன் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டு சுமார் 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இப்போது அவரது மனைவி கல்பனா சோரனும் அரசியலில் களமிறங்கியுள்ளார். அங்குக் காண்டே தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அங்கு ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சார்பில் கல்பனா சோரன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காண்டே தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சர்பராஸ் அகமது தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் வரும் மே 20ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், அத்துடன் இந்தத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதில் தான் கல்பனா சோரன் போட்டியிடுகிறார். ஹேந்த் சோரன் இருந்த வரை கல்பனா சோரன் அரசியலில் இருந்து விலகியே இருந்தார். ஹேமந்த் சோரன் கைதுக்கு பிறகு கடந்த மார்ச் 4ஆம் தேதி கிரிதிஹ் மாவட்டத்தில் நடந்த ஜேஎம்எம் கட்சியின் 51வது நிறுவனத் தின விழாவில் தான் இவர் முதல்முறையாக அரசியல் மேடை ஏறினார்.

கடந்த 2019ல் ஹேமந்த் சோரன் கூட்டணி ஆட்சியை அமைத்த நிலையில், அப்போது முதலே ஆட்சியைக் கவிழ்க்க எதிரிகள் சதித்திட்டம் தீட்டுவதாகக் குற்றஞ்சாட்டி இருந்தார். அதன் பிறகு பல அரசியல் கூட்டங்களில் கல்பனா சோரன் பங்கேற்ற நிலையில், இப்போது அவர் இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கல்பனா சோரன் எம்டெக் மற்றும் எம்பிஏ படித்தவர், ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் தனது பள்ளிக்கல்வியை முடித்த கல்பனா, புவனேஸ்வரில் பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டங்களைப் பெற்றார். இப்போது அவர் காண்டே தொகுதியில் போட்டியிடும் நிலையில், அவருக்கு எதிராக பாஜக சார்பில் சீதா சோரன் என்பவர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 26 April 2024 12:54 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!